Search
  • Follow NativePlanet
Share
» »மிகுந்த போக்குவரத்து நெரிசலால் உலகின் மெதுவான நாடுகளில் இடம் பெற்ற இந்தியா!

மிகுந்த போக்குவரத்து நெரிசலால் உலகின் மெதுவான நாடுகளில் இடம் பெற்ற இந்தியா!

இந்தியாவின் பெருநகர போக்குவரத்து நெரிசலைப் பற்றி கூறவே வேண்டாம்! டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை என இந்திய பெருநகரங்களில் நீங்கள் பயணம் செய்தால் போக்குவரத்து நெரிசல் இலவசம் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. காலை, மாலை வேளையிலும், விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் இந்த பெருநகரங்களில் உள்ள மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பெருநகரங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் சிறு சிறு நகரங்களும் கூட காலப் போக்கில் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து வருகிறது. சமீபத்தில், MoneyBarn என்ற பிரிட்டிஷ் கார் ஃபைனான்ஸ் மற்றும் லோன் நிறுவனம், மெதுவாக வாகனம் ஓட்டும் உலகின் முதல் 49 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்தியா முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது தெரியுமா?

indiaisslowcover

உலகின் மெதுவான நாடுகளில் 10 ஆவது இடத்தைப் பிடித்த இந்தியா

இந்தியாவில் போக்குவரத்து மிக மோசமான ஒன்றாகும் என்பதை நகரங்களில் வசிக்கும் மக்கள் சான்றளிக்க முடியும். சமீபத்தில், MoneyBarn, உலகில் மெதுவாகச் செல்லும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. அவர்கள் மொத்தம் 49 நாடுகளை பட்டியலிட்டனர் மற்றும் பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் அவற்றை வரிசைப்படுத்தினர். அந்த பட்டியலில் இந்தியா 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

india is slow

எல்லா வகையிலும் இந்தியாவின் ஓங்கி நிற்கும் போக்குவரத்து நெரிசல்

சராசரி நெரிசல் நிலைகள், அதிக மற்றும் குறைவான போக்குவரத்து உள்ள நாட்களை அளந்து பட்டியலில் உள்ள நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டது. நகரங்களில் உள்ள அதிகபட்ச வேக வரம்பு மற்றும் பொதுவாக அதிக வேக வரம்பின் சராசரியை தனித்தனியாக அளவிடவும் மதிப்பிடவும் அவர்களால் முடிந்தது. எல்லா அளவுகோல்களையும் எடுத்து பார்த்தாலும் இந்தியா போக்குவரத்து நெரிசலால் அதிக பாதிப்புக்கு உள்ளாவது தெரிய வந்துள்ளது.

indiaslow

மிகக்குறைந்த மதிப்பெண்களை வாங்கிய இந்தியா

பட்டியலில் சாலைகளின் தரம் 7 ஆகவும் மற்றும் ஒட்டுமொத்த மெதுவான போக்குவரத்து மதிப்பெண்ணை 10 ஆகவும் வைத்து கணக்கிட்டனர். இந்தியாவில் சாலைகளின் தரம் 7 இல் 4.5 என மதிப்பிடப்பட்டது. 10 இல், நாடு ஒட்டுமொத்த மெதுவான போக்குவரத்திற்காக 6.46 மதிப்பெண்களைப் பெற்றது. இது குறைந்த அளவு தானே!

முதல் இடத்தைப் பிடித்த பெரு

MoneyBarn இன் இந்த பட்டியலின்படி, பெரு வாகனம் ஓட்டுவதில் உலகின் மிக மெதுவாக உள்ள நாடு. சராசரியாக 26 நாட்கள் அதிக ட்ராஃபிக்கைக் கொண்டு பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. இது அதன் சாலையின் தரத்திற்காக 7 இல் 3.2 மதிப்பீட்டையும், ஒட்டுமொத்த மெதுவான போக்குவரத்திற்கு 8.45 மதிப்பீட்டையும் பெற்றது. இந்தப் பட்டியலில் ருமேனியாவும், இஸ்ரேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.

indiaisslow

மெதுவாக ஓட்டுவதற்கு முதல் 10 நாடுகளின் பட்டியலை கீழே

1. பெரு

2. ருமேனியா

3. இஸ்ரேல்

4. மெக்சிகோ

5. லாட்வியா

6. போலந்து

7. பெல்ஜியம்

8. சிலி

9. அர்ஜென்டினா

10. இந்தியா

போக்குவரத்து நெரிசலை குறைக்க என்ன வழி?

நகரங்களில் வசிக்கும மக்கள் பொதுப் போக்குவரத்தில் மிகவும் திறம்பட கவனம் செலுத்த வேண்டும், எதற்கு எடுத்தாலும் கார் பைக் என பயணம் செய்வதை தவிர்த்து பொது போக்குவரத்தில் செல்லலாம். அதே நேரத்தில் குறுகிய பயணங்களுக்கு மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு மாற்றத்தை ஊக்குவிக்க வேண்டும் அதாவது நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என செய்யலாம். பரந்த வசதியான நடைபாதைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட சைக்கிள் பாதைகள் மூலம் பயணம் பாதுகாப்பானதோடு மற்றும் எளிதாகவும் இருக்கும். நீங்களும் இது போன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது உண்டா?

More News

    Read more about: travel news tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+