Search
  • Follow NativePlanet
Share
» »கோடை விடுமுறை: 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு...எந்தெந்த ரூட்டில் தெரியுமா?

கோடை விடுமுறை: 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு...எந்தெந்த ரூட்டில் தெரியுமா?

தமிழ் புத்தாண்டு, விஷு, புனித வெள்ளி மற்றும் கோடை விடுமுறை என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகளை வர இருக்கின்றன. இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே ஆறு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு சென்று வர வசதியாக இருக்கும். சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் உள்பட பல ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பொதுமக்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் முழு விபரம் இதோ உங்களுக்காக...

Chennai Central Railway Station

சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்:

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 10, 17 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06089) புறப்படும். இது மறுநாள் காலை 10 மணிக்கு கன்னியாகுமரியை அடையும். கன்னியாகுமரியில் இருந்து ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06090) புறப்படும். இது மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

நாகர்கோவில் ரயில்:

நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 12-ம் தேதி காலை 4:30 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்படும். இது மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 13-ம் தேதி மாலை 4:45 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்படும். இது மறுநாள் அதிகாலை 4:15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 9, 16 ஆகிய தேதிகளில் மாலை 4:30 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்படும். இது மறுநாள் காலை 4:10 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 10, 17 ஆகிய தேதிகளில் காலை 8:15 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் புறப்படும். இது அதே நாளில் இரவு 8:55 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

சென்னை - கொல்லம் ரயில்:

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06113) புறப்படும். இது மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். கொல்லத்தில் இருந்து ஏப்ரல் 13, 20 ஆகிய தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் (06114) புறப்படும். இது மறுநாள் முற்பகல் 11.10 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

Rajdhani Express

சென்னை - போத்தனூர் ரயில்:

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 11-ம் தேதி இரவு 11.50 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06027) புறப்படும். இது மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். போத்தனூரில் இருந்து ஏப்ரல் 14-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06028) புறப்படும். இது சென்னை சென்ட்ரலை காலை 8.20 மணிக்கு வந்தடையும்.

தாம்பரம் - போத்தனூர் ரயில்:

தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 11, 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் மாலை 5.05 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06185) புறப்படும். இது மறுநாள் காலை 7.45 மணிக்கு போத்தனூரை சென்றடையும். போத்தனூரில் இருந்து ஏப்ரல் 13, 20, 27, மே 4 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06186) புறப்படும். இது மறுநாள் நண்பகல் 12.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இதுதவிர, மங்களூர் சந்திப்பு- திருவனந்தபுரம் வடக்கு இடையே ஒரு சிறப்பு ரயிலும், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது.

டிக்கெட் முன்பதிவு:

சென்னை சென்ட்ரல் - கொல்லம், தாம்பரம் - போத்தனூர், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஏப்ரல் 10 காலை 8 மணிக்குத் தொடங்கியது. மற்ற 3 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. தெற்கு ரயில்வே இந்த சிறப்பு ரயில்களை இயக்குவதன் மூலம், பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கவும் தயாராக உள்ளது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+