Search
  • Follow NativePlanet
Share
» »பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள்!

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள்!

சென்னையின் எந்த மூலையில் இருப்பவர்களும், தங்கள் சொந்த பந்தத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணிக்கின்றனர். அதனால் சென்னையிலிருந்து பொங்கல் நேரத்தில் வெளியூர் செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்கள் யாவும் முழு கொள்ளளவில் இயங்குகின்றன. அந்த வகையில் தமிழக அரசு சார்பிலும், தென்னக ரயில்வே சார்பிலும் சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. இப்போது பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக மதுரை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படவுள்ளன!

Pongal Special Train

சென்னையிலிருந்து ஊர்களுக்கு பயணிக்கும் மக்கள்

சென்னையின் அசல் குடியிருப்பாளர்கள் யார் யாரென்று பொங்கல் விடுமுறையில் தான் நாம் தெரிந்துக் கொள்ளலாம். வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை, தமிழகத்தின் தலைநகராக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த பல லட்ச மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி வருகிறது. சென்னையில் தங்கி வேலை பார்க்கும் பலரும், பண்டிகை மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்கள் நோக்கி பயணிக்கின்றனர். இதனால் பொங்கல் நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாவதால், தென்னக ரயில்வேயும், தமிழக அரசும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகின்றன.

தென்னக ரயில்வே இயக்கிய சிறப்பு ரயில்கள்

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள சொந்த ஊர்கள் மற்றும் கிராமங்களுக்கு பயணிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பொங்கல் பண்டிகையின் போது அதிகரித்து வரும் பயண தேவையை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த ஆண்டு பொங்கலின் போது சென்னையிலிருந்து திருச்சி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

Pongal Special Train

சென்னை திரும்புவோர் வசதிக்காக சிறப்பு ரயில்கள்

சென்னை-மதுரை மற்றும் மதுரை-சென்னை சிறப்பு ரயில்

ரெயில் எண் 06061 சென்னை எழும்பூர் மதுரை முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து 18, 2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு அதே நாளில் இரவு 7.15 மணிக்கு மதுரையை வந்தடையும். மறுமார்க்கத்தில் ரெயில் எண் 06062 மதுரை - சென்னை எழும்பூர் முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் ஜனவரி 19, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4.00 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 00.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த 8 பெட்டிகள் கொண்ட மெமு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலையில் நின்று செல்லும்.

ராமநாதபுரம்-தாம்பரம் சிறப்பு ரயில்

ரயில் எண். 06104, ஜனவரி 19, 2025 அன்று மாலை 3:30 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். பொங்கலுக்குப் பிந்தைய பயண நெரிசலை சமாளிக்கும் வகையில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, கல்லல், திருப்பத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயில்

ஜனவரி 19, 2025 அன்று தூத்துக்குடி-தாம்பரம் ஒருவழி அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படும். தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்திலிருந்து இன்று பெறப்பட்ட செய்திக்குறிப்பின்படி, இந்த ரயில் தூத்துக்குடியில் மாலை 4.25 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்கள் முன்பதிவு செய்யப்படாதவை என்பதையும், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கை வசதி உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளவும். இருக்கையைப் பெற, நிலையத்திற்கு சீக்கிரமாக வருவது நல்லது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+