Search
  • Follow NativePlanet
Share
» »ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த வி.ஐ.பிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பிரசாத பெட்டிகளுக்குள் என்ன இரு

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த வி.ஐ.பிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பிரசாத பெட்டிகளுக்குள் என்ன இரு

இந்தியா முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ராம் ஜென்ம பூமி' திறப்பு விழா மிக கோலாகலமாக அரங்கேறியது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற ராமர் பிரதிர்ஷ்டை நிகழ்வில் சச்சின், ரஜினிகாந்த், அம்பானி, அதானி மற்றும் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். மங்களகரமான தருணத்தைக் கொண்டாட, அங்கு ஒன்று கூடிய பிரபலங்களுக்கும், விழாவுக்கும் வருகை தந்த முக்கியஸ்தர்களுக்கும் சிறப்புப் பிரசாதப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு பிரசாத பெட்டிகளுக்குள் என்ன இருக்கிறது தெரியுமா?

விருந்தினர்களுக்காக சிறப்பு பிரசாத பெட்டிகள்

அயோத்தியின் ராம் மந்திரின் பிரான் பிரதிஷ்டை விழாவின் அழைப்பாளர்களுக்கு ஒரு சிறப்பு பிரசாத பெட்டி வழங்கப்பட்டது. குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு, பக்தர்களுக்கு இந்த சிறப்பு பிரசாத பெட்டிகள் வழங்கப்பட்டது, அதில் குறைந்தது ஏழு சுவையான பொருட்கள் உள்ளனவாம். லக்னோவில் உள்ள பிரபல இனிப்புக் கடையான சப்பான் போக் நிறுவனத்திற்கு கோயில் அறக்கட்டளை 15,000 பிரசாதப் பெட்டிகளுக்கு ஆர்டர் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

specialprasadboxesgiventoinviteesinayodhya1

நன்கொடையாக பிரசாதம் வழங்கிய பிரபல இனிப்புக் கடை

கோயில் அறக்கட்டளையில் இருந்து ஆர்டரைப் பெற்ற இனிப்புக் கடை, அதற்கான பணத்தை எடுக்க மறுத்துவிட்டது. எத்தகைய வரலாற்று சிறப்பு நிகழ்வு இங்கு நடக்கிறது, அதில் கலந்து கொள்வதே எங்களுக்கு பெருமை. இதை எங்கள் பாக்கியமாக கருதுகிறோம் என்று கூறி, 15,000 பெட்டிகளையும் அந்த பிரபல இனிப்புக்கடை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த பெட்டிகளில் சுவையாக செய்யப்பட்ட இனிப்புகள் மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த பிற பொருட்கள் உள்ளனவாம்.

சிறப்பு பிரசாத பெட்டியில் உள்ள பொருட்கள்

குர் ரேவ்டி

ராம்தானா சிக்கி

துளசி தளம்

நெய் மாவா லட்டுகள்

ஏலக்காய் இனிப்புகள்

அக்ஷத் மற்றும் ரோலி

ராம் தியா

முந்திரி

மக்கானா

பாதாம்

திராட்சை

உருளைக்கிழங்கு சிப்ஸ்

காவி நிற பிரசாத பெட்டியில் ஹனுமான் கர்ஹி மற்றும் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் சின்னங்கள் உள்ளன. பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பைகளில் இந்த பிரசாத பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட மகா பிரசாதம்

மேலும், விருந்தினர்களுக்கு மகா பிரசாதமும், நெய்யில் தயாரிக்கப்பட்ட சாத்வீக உணவும் வழங்கப்படும். 200 பேர் கொண்ட குழு மூலம் 5000 கிலோ எடையுள்ள பொருட்களைப் பயன்படுத்தி மகா பிரசாதம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மஹா பிரசாதம் தயாரிக்க தேசி நெய், உளுந்து, சர்க்கரை மற்றும் உலர் பழங்கள் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குஜராத்தைச் சேர்ந்த பார்தி கர்வி குஜராத் மற்றும் கோவில் அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் கீழ் சந்த் சேவா சன்ஸ்தா இந்த மஹா பிரசாதத்தை தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

நீங்கள் எப்படி கொண்டாடினீர்கள்?

சாத்வீக மதிய உணவில் சுவையான தினை சார்ந்த உணவுகள் இருக்கும். சாத்விக் மதிய உணவு மெனுவில் உள்ள சில உணவுகள் மாதர் கச்சோரி, தெப்லாஸ், பாதாம் பர்ஃபி மற்றும் பல என்று அறிக்கை கூறுகிறது. எனவே மக்களே, அயோத்தியின் ராமர் கோவில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழாவை எப்படிக் கொண்டாடுகிறீர்கள்? வீட்டில் பிரசாதம் தயார் செய்தீர்களா? அல்லது கோவிலுக்கு சென்றீர்களா?

More News

    Read more about: ram mandir ayodhya
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+