Search
  • Follow NativePlanet
Share
» »இது வீடே அல்ல, பெரிய நகரம் – அம்பானி வீட்டை பார்த்து வாயைப் பிளந்த கனடா பிரபலம்!

இது வீடே அல்ல, பெரிய நகரம் – அம்பானி வீட்டை பார்த்து வாயைப் பிளந்த கனடா பிரபலம்!

உலகின் மிக விலையுயர்ந்த, பணக்கார வசிப்பிடங்களில் முதலில் இருப்பது லண்டனில் ராஜ குடும்பம் வசிக்கும் பக்கிங்ஹாம் பேலஸ், இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியாவில் உள்ள ஒரு பிரபல குடியிருப்பு தான். நாம் எந்த வீட்டைப் பற்றி பேசுகிறோம் என்று நீங்கள் யூகித்து இருக்கலாம். ஆம்! ரூ.15,000 கோடி மதிப்பில் மும்பையில் கட்டப்பட்டுள்ள "அண்டிலிய"' எனப்படும் மிக பிராமாண்டமான குடியிருப்பு தான் அது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் குடும்பம் தான் அதில் வசித்து வருகிறது. கனடாவை சேர்ந்த பிரபல யூடியூபர் இந்த வீட்டை கண்டவுடன், இது வீடே அல்ல. இது நகரம் என்று வாயைப் பிளந்து வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்!

உலகின் 2 ஆவது விலையுயர்ந்த வீடு

உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உலகம் முழுவதிலும் உள்ள பணக்கார வீடுகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் பிரமாதமாக கட்டப்பட்டுள்ளன, அவற்றில் ஒன்று மும்பையில் உள்ளது. ஆம், அது கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஆடம்பரமான ஆன்டிலியா. சமீபத்தில், கனடிய வோல்கர் ஒருவர் மூச்சடைக்கக்கூடிய கட்டிடக்கலையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வீடியோ ஒன்ற பதிவிட்டுள்ளார்.

பார்வையாளர்கள் அனைவரும் வியக்க வைக்கும் ஒரு அமைப்பு

'சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்' என்ற இடத்தில் கோடீஸ்வரர்களின் வரிசையில் அமைந்திருக்கும் இந்த அம்பானியின் இல்லம், தனித்துவமான முறையில் ஒரு காட்சி விருந்தாக உள்ளது. உயரமான டவர்கள், அற்புதமான உள்கட்டமைப்புகள், அசாதாரண வடிவமைப்புகள் மற்றும் சுமார் 2,000 மில்லியன் அமெரிக்க டாலர்களின் பெரும் பட்ஜெட் ஆகியவை இணைந்து இந்த உலகப் புகழ்பெற்ற வீட்டை உருவாக்குகின்றன. பெரும்பாலும் பார்வையாளர்கள் அல்டாமவுண்ட் சாலையில் உள்ள வீட்டிற்கு அருகில் பயணம் செய்து அதன் பின்னணியில் உள்ள ஒரு பார்வையைப் பெறுவார்கள்.

Canadian vlogger visits ambani s antilia and goes awestruck1

இது வீடே அல்ல, பெரிய நகரம் - வியந்த கனடிய யூடியூபர்

மும்பையில் உள்ள ஆண்டிலியாவை பார்த்து வியந்த கனடிய யூடியூபர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் அவர் ஏன் மிகவும் ஆச்சரியப்பட்டார் மற்றும் அதைப் பற்றி மேலும் அறிந்து ஆட்கொண்டார் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளலாம். நோலன் இரு சக்கர வாகனத்தில் சவாரி செய்து கொண்டிருந்த போது, என்ன கட்டிடம் இது இவ்வளவு பெரியதாக உள்ளதே என்று கேட்ட போது, இஹ்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் வீடு என்று குறிப்பிட்டுள்ளார். இதை கேட்ட கனடிய யூடியூபர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இது வீடல்ல, ஒரு பெரிய நகரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படி என்ன இருக்கிறது இந்த சொகுசு வீட்டில்?

ஆன்டிலியா என்ற பெயரின் அர்த்தம் - இந்த வீட்டின் பெயர் 15 ஆம் நூற்றாண்டில் ஒரு புராண தீவாக இருந்த 'ஆண்டிலியா' என்ற அழகான தீவில் இருந்து பெறப்பட்டது.

ஆண்டிலியாவில் தொங்கும் தோட்டம் - அம்பானி வீட்டில் பல்வேறு வகையான செடிகள் மற்றும் மரங்கள் கொண்ட பெரிய தொங்கும் தோட்டம் உள்ளது; இருப்பினும், தோட்டம் பொதுமக்களின் வருகைக்காக திறக்கப்படவில்லை.

ஆன்டிலியா செலவு - உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் (1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கட்டுமானச் செலவை விட ஆன்டிலியாவின் (2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கட்டிடச் செலவு அதிகம்.

ஆன்டிலியா 2வது மிகவும் விலையுயர்ந்த குடியிருப்பு சொத்து - 4,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட ஆன்டிலியா, பக்கிங்ஹாம் அரண்மனைக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த குடியிருப்பு சொத்து ஆகும்.

ஆன்டிலியா மாடிகள், ஊழியர்கள் உறுப்பினர்கள் - 27 மாடிகளைக் கொண்ட ஆண்டிலியாவில் 600க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குழு உள்ளது, அது அதன் அழகையும் கம்பீரத்தையும் பராமரிக்கிறது.

ஆன்டிலியா வசதிகள் - ஆண்டிலியாவில் பார்க்கிங்கிற்கு ஆறு தளங்கள் (உலகின் அனைத்து சொகுசு கார்களும் அடங்கிய தொகுப்பு) , மும்பை வெப்பத்தை வெல்ல ஒரு பனி அறை, மூன்று ஹெலிபேடுகள், பல நீச்சல் குளங்கள், நடனம் மற்றும் யோகா ஸ்டுடியோ மற்றும் ஒன்பது சூப்பர்-பாஸ்ட் லிஃப்ட் மற்ற நேர்த்தியான வசதிகளுடன் உள்ளன.

More News

    Read more about: travel news antillia mumbai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+