Search
  • Follow NativePlanet
Share
» »இனி தமிழக அரசுப் பேருந்துகளில் நீங்கள் 60 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்!

இனி தமிழக அரசுப் பேருந்துகளில் நீங்கள் 60 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்!

பொங்கல், தீபாவளி மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பவரா நீங்கள்? இனி இனி நீங்கள் உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது 60 நாட்களுக்கு முன்னரே கூட டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அப்படியொரு வசதியை தமிழக போக்குவரத்து துறை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தற்போது தெரிவித்துள்ளது!

தமிழக அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் முறை

தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி நீண்ட காலமாக செயலில் இருந்து வருகிறது. நேரிலோ அல்லது இணையம் மூலமாகவோ பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே போல பண்டிகை மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

tnstcandsetcbusbookings

30 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்ட முன்பதிவு காலம்

தமிழக அரசு பேருந்துகளில் இதுவரை 30 நாட்களுக்கு முன்னர் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருந்து வந்தது. இந்த முன்பதிவு நாட்கள் காலத்தை 30 இல் இருந்து 60 ஆக தமிழக அரசு போக்குவரத்து கழகம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் 15.03.2024 இல் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை செய்திகுறிப்பில் கூறியதாவது, "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் பயண முன்பதிவு காலம் 30 இல் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது, பயணிகளின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

tnstcandsetcbusbookings open

இரு வழியாகவும் புக்கிங் செய்து கொள்ளலாம்

இதனை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார். இந்த அறிலிப்பை தொடர்ந்து, 60 நாள்களுக்கு முன்பே பயணத்துக்கு திட்டமிடலாம். முன்பு இந்த வசதி 30 நாள்கள் வரை மட்டுமே இருந்தது. பயணிகள் www.tnstc.in இணையதளம் வழியாகவும் மற்றும் செல்போன் மூலமாகவும் (Mobile app ticketing) 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் அனைத்து தமிழ்நாடு போக்குவரத்துக்கழக நெடுந்தூர பேருந்துகளுக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் காலம் 30 நாள்களில் இருந்து 60 நாள்களாக மாற்றம் செய்யப்பட்டது பயணிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

More News

    Read more about: travel news tnstc
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+