Search
  • Follow NativePlanet
Share
» »வாங்க பெளத்த தடயங்கள் குறித்து அறிவோம்?

வாங்க பெளத்த தடயங்கள் குறித்து அறிவோம்?

சுற்றுலா என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் மாறுப்பட்டு இருக்கும். அவற்றை அவர்கள் அணுகும் விதத்தை பொறுத்து, ஒவ்வொரு விதமான அனுபவம், அறிவை வழங்கும்.

அப்படி இருக்கும் போது, உலகில் பழமையான ஆன்மீக பாதைகளில் ஒன்று பௌத்தம். தமிழ்நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீக நிலப்பரப்பில், அழியாத முத்திரையை பதித்துள்ளது என்பதை நம்பித் தான் ஆக வேண்டும்.

கௌதம புத்தரின் போதனைகளில், அதன் தோற்றம் ஆழமாக வேரூன்றியது என்றால் மிகையாகாது. இந்த அமைதியான தத்துவம், இந்தியாவின் தென் பகுதிகளுக்கும் சென்று, உள்ளூர் மரபுகள் மற்றும் அவற்றின் நடைமுறைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

காலங்காலமாகப் போற்றப்படும் பெளத்தப் போதைகள், திராவிட பாரம்பரியத்தின் சங்கமத்துக்கு, இன்று தமிழ்நாடு ஒரு சான்றாக நிற்கிறது. வரலாறு, ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தின் கலவையை விரும்புவோருக்கு, இது தவிர்க்க முடியாத இடமாக அமையும்.

buddhaincarnation

தமிழகத்தில் எங்கெங்கு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், பூம்புகார், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வில்லிபுரம், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில், பெளத்தத்தின் தடயங்கள் உள்ளன.

இவற்றில் சென்னையில் எங்கு உள்ளது என்பதை, கீழே இடம்பெற்ற வார்த்தைகளை ஒரு முறை உற்று நோக்கினால், பழமையான ஆன்மீக பாதையான பெளத்தம் குறித்து அறியலாம் வாங்க..

வாங்க உணரலாம்?

சென்னை மற்றும் அதையொட்டிய பகுதிகளில், உங்களின் ஆத்மார்த்த சகாக்களுடன் சுற்றி இருக்கலாம். அந்த நேரத்தில், கண்ணில் இருந்து கடந்து சென்ற பகுதிகளில், ஒன்றாவது பெளத்ததின் தடயங்கள் என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா?

அப்படி அதை பீல் பண்ணியிருந்தா....? வரலாறு பற்றிய உங்கள் பார்வை விலாசமானது என்பதும், இந்த கட்டுரையை ஒரு நொடி நீங்கள் கடந்து செல்லும்போது, நாங்களும் அதை உணருவோம்.

buddha1

அந்த பெளத்த தடயங்கள் சென்னையில் எங்கு உள்ளன; அவற்றை ஒரு நாளில் அதை சுற்றி பார்க்கலாம் என்பதை நீங்கள் நினைவில் நிறுத்தி, சுற்றி பார்க்க கிளம்பலாம் வாங்க... எவ்வித ஐயமும் கொண்டிருக்க தேவையில்லை.

v இலங்கை புத்த கோவில்

v தியோசாபிகல் சொசைட்டி புத்தர் கோவில்

v தென்னிந்திய புத்த விஹார்

v புத்த விகாரா புத்த கோவில்

v புத்தவேடு புத்தர் தியான திருமேனி திருத்தலம் அறக்கட்டளை

v பல்லவமலை அருள்நிலை புத்தர் ஆலயம்

v பெரம்பூர் புத்த கோவில்

v புத்த மையம்

v ரோகினி புத்த விஹார்

v இந்தோபர்மா புத்த கோவில் கலாச்சார மையம்

v ஹுவாண்டே கோயில்

v சென்னை அருங்காட்சியகம்

மேற்குறிப்பிட்ட பகுதிகளை காலையில் சுற்றுப்பயணத்தை துவக்கினால், மாலையில் நிச்சயம் நிறைவு செய்து விடலாம். சரியான திட்டமிடனும் நினைக்கும் உங்களின் எண்ணங்களுக்கு, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் வழிகாட்டுகிறது.

அழுத்தங்கள் அதிகரித்து வரும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையை சமாளிக்க முடியாத இளம் தலைமுறையினருக்கு, 'கெளதம புத்தர்' வாழ்க்கை ஒரு உத்வேகமாக இருக்கிறது. விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்ட புத்தர் மற்றும் அவர் விட்டு சென்ற தடயங்களை நாமும் ஒரு முறையேனும் அறிவது அவசியம் என விரும்பினால்... உடனே அணுகலாம்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

சுற்றுலா வளாகம், எண்.2,

வாலாஜா சாலை,

திருவல்லிக்கேணி,

சென்னை-600 002.

தொடர்பு எண்கள்: +91 44 25333444, 25333333, 25333857, 25333850-54

மின்னஞ்சல் முகவரி:

[email protected]

[email protected].

ஆன்லைன் முன்பதிவு: www.ttdconline.com

மொபைல் முன்பதிவு: www.mttdconline.com

அதிகாரப்பூர்வ இணையதளம்:

www.tamilnadutourism.org

இது, எல்லாம் எங்களுக்கு வேண்டாம். நாங்களே பார்க்க போறோம் என்று நீங்க கிளம்பினால், அதற்கு சரியான நேரத்தை தேர்வு செய்யுங்கள்... கருமேகங்கள் சூழ்ந்து, ரம்மியமாக வானம் உங்கள் பார்வைக்கு வசப்படும் போது, காற்றையும், அதன் ஊடே செல்லும் அதன் இசையையும் அணைத்து கொண்டு செல்ல மறக்காதீங்க....!

More News

    Read more about: tn buddhist heritage
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+