Search
  • Follow NativePlanet
Share
» »உலக போக்குவரத்து நெரிசல் பட்டியலில் இடம் பிடித்த பெருநகரங்கள்- எந்தெந்த சிட்டி தெரியுமா?

உலக போக்குவரத்து நெரிசல் பட்டியலில் இடம் பிடித்த பெருநகரங்கள்- எந்தெந்த சிட்டி தெரியுமா?

அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் முக்கிய நகரங்களின் உள்ள போக்குவரத்து நெரிசலைப் பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். டிராஃபிக் இல்லாத பெங்களூரு, மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களை பார்ப்பது கடினம், நம்ம ஊர் டிராஃபிக் உள்ளூர் அல்ல, உலக அளவில் கூட பேமஸ் தான் போல! ஆம், இந்திய நகரங்கள் உலக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன!

டிராஃபிக்கில் சிக்காத வரை பயணம் இனிமையானது

சாலைப் பயணங்கள் அல்லது காரில் எங்கும் பயணம் செய்வது, எப்போதும் இல்லாத போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளும் வரை வசதியாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். காலை அலுவலக நேரமாக இருந்தாலும், மாலை நேரமாக இருந்தாலும், சாலைகளில் நெரிசல் தவிர்க்க முடியாதது, அதை நாம் அடிக்கடி சந்திப்போம். சமீபத்தில், மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது மற்றும் அதிர்ச்சியூட்டும் வகையில், மும்பை அதில் ஒரு பகுதியாக இல்லை.

trafficcities

அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரம் - லண்டன்

மக்கள் லண்டனுக்குச் சென்றிருந்தாலும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நகரம், அதன் பரபரப்பான சூழல், பார்வையாளர்களின் கூட்டம் மற்றும் பலவற்றைப் பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும். சுவாரஸ்யமாக, டாம் டாம் என்கிற டச்சு நிறுவனத்தின் படி, இங்கிலாந்து தலைநகர் 2023 ஆம் ஆண்டில் மெதுவான நகரமாக பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சராசரியாக மணிக்கு 14 கிமீ வேகத்தில் தான் லண்டன் இருந்ததாக அறிக்கை கூறுகிறது.

உலகம் முழுவதும் ஆய்வு நடத்திய நிறுவனம்

மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களின் போக்குவரத்து குறியீட்டு அறிக்கையை சரிசெய்வதற்காக, தொழில்நுட்ப நிறுவனம் 6 கண்டங்களில் இருந்து 55 நாடுகளில் உள்ள 387 நகரங்களை மதிப்பீடு செய்தது. டாம்டாம் 600 மில்லியனுக்கும் அதிகமான இன்-கார் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் ஸ்மார்ட்போன்களில் இருந்து தரவைச் சேகரித்தது. இது 2023 இல் ஒட்டுமொத்த நெட்வொர்க்கைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு கிலோமீட்டருக்கு சராசரி பயண நேரத்தைக் கணக்கிட்டது.

world traffic most cities

டப்ளின், மிலன், லிமா

முதல் இடத்தில் லண்டனுக்கு அடுத்தபடியாக, டப்ளின் 29 நிமிடம் 30 வினாடிகளுக்கு சராசரியாக 10 கிமீ பயண நேரத்தைக் கொண்ட இரண்டாவது-குறைந்த நகரமாகும். அடுத்து டொராண்டோவைத் தொடர்ந்து மிலன் மற்றும் லிமா இடம்பிடித்துள்ளன.

இந்தியாவின் மெதுவான நகரம் - பெங்களூரு

பயங்கரமான போக்குவரத்து நெரிசல்கள் உள்ள இந்திய நகரங்களைப் பற்றிப் பேசும்போது, முதலில் நம் நினைவுக்கு வருவது பெங்களூரு, மும்பை, சென்னை மற்றும் டெல்லி. ஆனால், அவற்றில் பெங்களூரு தவிர வேறு இந்த எந்த பெருநகரமும் இந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசலுடன் காணப்படவில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது. டாம்டாம் ட்ராஃபிக் இன்டெக்ஸ் 2023 இல், 18 கிமீ/மணி வேகத்தில் சராசரி வேகத்துடன் கூடிய மெதுவான நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 6வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக புனே 7வது இடத்தில் உள்ளது, ரஷ் அல்லது பீக் ஹவரில் சராசரியாக மணிக்கு 19 கி.மீ. தூரம் தான் நாம் புனேவில் பயணிக்க முடியும்.

bengalurutraffic1

போக்குவரத்து நெரிசல் அதிகம் நிறைந்த நகரங்கள்

1. லண்டன், ஐக்கிய இராச்சியம்

2. டப்ளின், அயர்லாந்து

3. டொராண்டோ, கனடா

4. மிலன், இத்தாலி

5. லிமா, பெரு

6. பெங்களூரு, இந்தியா

7. புனே, இந்தியா

8. புக்கரெஸ்ட், ருமேனியா

9. மணிலா, பிலிப்பைன்ஸ்

10. பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம்

நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள்? உங்கள் ஊரில் டிராஃபிக் எப்படி?

More News

    Read more about: travel news traffic cities
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+