Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பச்மாரி » ஈர்க்கும் இடங்கள் » சௌரகார் சிகரம்

சௌரகார் சிகரம், பச்மாரி

27

சுமார் 1326 அடி உயரத்தில் அமைந்துள்ள சௌரகார் சிகரம், பச்மாரியின் மிக உயரமான இடங்களுள் ஒன்றாகும். இச்சிகரம், பச்மாரியின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, நீரோடைகள், அருவிகள் மற்றும் கீழே உள்ள பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சியை நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

சௌரகார் சிகரத்தில் காணப்படும் பிரபலமான சிவன் கோயில் இதனை பிரபலமான ஒரு யாத்ரீக ஸ்தலமாக விளங்கச் செய்கிறது. மஹாசிவராத்திரி விழாவின் போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் இச்சிகரத்தில் ஏறி வந்து இக்கோயிலில் வழிபாடு செய்து விட்டுத் திரும்புகின்றனர்.

பக்தர்கள் சிறிய திரிசூலம் ஒன்றை இங்கு சிவனுக்கு காணிக்கையாக்கிச் செல்கின்றனர். ஒருவர் இக்கோயிலை அடைய வேண்டுமானால், சுமார் 1250 படிக்கட்டுகள் ஏற வேண்டியிருக்கும்.

இங்கு வருகை புரிவோர் தரிசனத்துக்குப் பின் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஓய்வு இடமான தர்மசாலாவில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். பக்தர்கள் மட்டுமல்லாது, சாகசம் மற்றும் இயற்கையை விரும்பும் உல்லாசப் பயணிகளும் இந்த சிகரத்துக்கு வந்து சுற்றியுள்ள அழகிய இயற்கைக் காட்சியைக் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.    

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed