அரு என்ற இடம் பஹல்கமிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 2408 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இவ்விடத்தில் இருந்து பார்த்தால் பள்ளத்தாக்கின் காட்சியமைப்பு மிக பிரம்மாண்டமாக தெரியும்.
தீரச்செயல் புரிய விரும்பும் சுற்றுலாப் பயணிகள் லிட்டர்வாட்டைக் கடந்து கொலஹி பனிக்கட்டி ஆறு வரை நடை பயணம் மேற்கொள்ளலாம். அழகான புல் படர்ந்த நிலங்களை கொண்ட இவ்விடம் முகாமிட தகுந்த இடம்.
இந்த இடத்தை அடைய பள்ளத்தாக்கின் கீழே இறங்கி நடந்து வந்தால் சுலபமாக இருக்கும். மேலும் தீரச்செயல் புரிய விரும்பும் சுற்றுலாப் பயணிகள் அருவிலிருந்து சோனாமார்க்கிற்கு மூன்று நாள் நடை பயணம் செய்யலாம். அதுமட்டுமல்லாமல் குதிரை ஒன்றை வாடகைக்கு எடுத்து அதன் மேலும் பயணம் மேற்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications