பஹல்கம் வரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பும் முக்கியமான விளையாட்டுக்களில் மீன் பிடித்தல் மிகவும் புகழ் பெற்றது. ஸ்ரீநகரில் இருக்கும் மீன் பண்ணை இயக்கத்தின் சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பு மையத்தில் அனுமதி பெற்றுக் கொண்டால் லிட்டர் மற்றும் சேஷ்நாக் ஓடைகளில் மீன் பிடிக்கலாம்.
ஒரு தனி மனிதன் ஒரு நாளைக்கு ஆறு மீன் பிடிக்கலாம் என்ற சட்டமும் போடப்பட்டுள்ளது. இந்த அனுமதி மூன்று நாளைக்கு தான் செல்லுபடியாகும். ஒரு நபர் எத்தனை மீன் பிடி தூண்டில்கள் வாடைகைக்கு எடுக்கிறாரோ அதை பொறுத்தே கட்டணம் அமையும். வானிலை இனிமையாக இருப்பதால், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மீன் பிடிப்பதற்கு சிறந்த நேரம்.



Click it and Unblock the Notifications