பாலம்பூருக்கு விஜயம் செய்யும் பயணிகளை வெகுவாக கவரும் அம்சம் இங்குள்ள தேயிலைத்தோட்டங்கள்தான். ஏராளமான தேயிலைத்தோட்டங்கள் இந்நகரைச்சுற்றி அமைந்துள்ளதால் வடமேற்கு இந்தியாவில் தேயிலைத்தலைநகரம் என்ற சிறப்புப்பெயரை இது பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஏக்கர் கணக்கில் பரந்து காணப்படும் தேயிலைத்தோட்டங்கள் இந்த நகர மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. 19ம் நூற்றாண்டின் மத்தியில் வடமேற்கு எல்லைப் பிராந்தியத்தின் தோட்டக்கலை கண்காணிப்பாளராக இருந்த டாக்டர். ஜான்சன் என்பவரின் முயற்சியில் இப்பகுதியில் தேயிலைத்தோட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
தேயிலைத்தோட்டங்களுக்கு பிரசித்தமான விளங்கியதால் 1883ம் ஆண்டிலேயே உலக வரைபடத்தில் இந்த பாலம்பூர் இடம் பெற்றிருந்துள்ளது. இப்பகுதியில் விளையும் தேயிலை காங்க்ரா டீ என்ற பெயரில் பிரசித்தமாக அறியப்படுகிறது.
தர்பாரி, பஹார் மற்றும் மல்ஹார் எனப்படும் பிராண்டுகளாக இந்த தேயிலை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பிராண்டுகளுக்கு இந்திய சாஸ்த்ரீய சங்கீதத்தின் ராகங்களே பெயர்களாக வைக்கப்பட்டுள்ளது ஒரு சுவாரசியமான அம்சமாகும்.



Click it and Unblock the Notifications