சௌமுகா கோயில் என்றும் அறியப்படுகிற இந்த ஆதீஷ்வர் கோயில் 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மிக உன்னதமான கட்டிடக்கலை அம்சத்தைக் கொண்டுள்ளதாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
சொர்க்க விமானம் எனப்படும் ‘நளினகுல்ம விமான’த்தைப் போன்று இந்தக் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள பெரிய ஜைனக்கோயில்களில் ஒன்றான இதனை கட்டி முடிக்க 65 வருடங்கள் ஆனதாக சொல்லப்படுகிறது.
நாட்டிலுள்ள 5 முக்கிய ஜைன திருத்தலங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. மூன்று அடுக்குகள், 80 கோபுரங்கள் மற்றும் 29 கூடங்களை இக்கோயில் கொண்டுள்ளது. இதன் கர்ப்பகிருகத்தில் நான்கு முகத்துடன் காட்சியளிக்கும் ஆதீநாதர் அல்லது ரிஷபதேவர் சிலையை தரிசிக்கலாம்.



Click it and Unblock the Notifications