Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பனாஜி » ஈர்க்கும் இடங்கள் » சீ கத்தீட்ரல் ஆஃப் சாண்டா கேத்ரீனா

சீ கத்தீட்ரல் ஆஃப் சாண்டா கேத்ரீனா, பனாஜி

33

கேத்தரின் ஆஃப் அலெக்ஸாண்டிரியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் சீ கத்தீட்ரல் ஆஃப் சாண்டா கேத்ரீனா இந்தியாவின் மிகப்பெரிய தேவாலயமாக கருதப்படுகிறது. இந்த தேவாலயம் 250 அடி நீளமும், 181 அடி அகலமும், 115 அடி உயரமும் கொண்டது. இதற்கு வெகு அருகிலேயே மற்றொரு புகழ்பெற்ற தேவாலயமான செயின்ட் ஃபிரேன்சிஸ் ஆப் அஸிஸி தேவாலயமும், கன்னி மாடமும் அமைந்துள்ளன.

உலகிலேயே கேத்தரினுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தேவாலயங்கள் பிரேசில் நாட்டில்தான் அதிகம் உள்ளன. அதில் சீ கத்தீட்ரல் ஆஃப் சாண்டா கேத்ரீனாவும் ஒரு பகுதியாக கொள்ளப்படுகிறது. இந்த தேவாலயத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் சமயத்தில் ஆயிரமாயிரம் பயணிகளும், பக்தர்களும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

தேவாலயத்தின் வரலாறு

இந்த தேவாலயம் 1510-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்கள், முகாலய அரசிடமிருந்து கோவாவை கைப்பற்றியதின் நினைவாக கட்டப்பட்டது. இதன் இரண்டு கோபுரங்களில் ஒன்று காலப்போக்கில் அழிந்துபோயிற்று. ஆயினும் அதன் பிறகு இது திரும்பவும் புதிப்பிக்கப்பட்டு கட்டப்படவில்லை. இதன் காரணமாகவே இது சமச்சீரற்று தோற்றமளிக்கிறது.

கோவாவை போர்த்துகீசியர்கள் கைப்பற்றிய அன்று கேத்தரின் திருவிழா என்பதால் இந்த தேவாலயம் கேத்தரினுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்த தேவாலயம் 1619-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டாலும், 1640-ஆம் ஆண்டிலிருந்துதான் இங்கு வழிபாடுகள் துவங்கின.

சீ கத்தீட்ரல் ஆஃப் சாண்டா கேத்ரீனா தேவாலயத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கும் பூஜை மாடத்தை முதல் முறையாக பார்க்கும் எவருமே அதன் பேரழகை கண்டு மயங்கிப் போவது நிச்சயம். மேலும், ஆலயத்தின் கோபுர உச்சியில் பெரிய மணி ஒன்று உள்ளது. இந்த ஆலயமணி எழுப்பும் இன்னிசை மிக்க ஒலியின் தரத்தினை குறிப்பதற்காக இதற்கு கோல்டன் பெல் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தேவாலயத்தை எப்படி அடைவது?

இந்த தேவாலயம் கோவா தலைநகர் பனாஜியிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. எனவே பனாஜி, வாஸ்கோ மற்றும் மார்கோவிலிருந்து வாடகை கார்களின் மூலம் ஒருவர் சுலபமாக தேவாலயத்தை அடைந்து விடலாம்.

ஆனால் நீங்கள் சொந்த வாகனத்தில் தேவாலயத்துக்கு செல்லும் அனுபவம் சிறப்பாக இருக்கும்.அப்படி நீங்கள் செல்லும் பட்சத்தில் தேவாலயத்தின் அருகில் உள்ள மற்ற இடங்களுக்கும் சென்று பார்க்கலாம். அதிலும் குறிப்பாக செயின்ட் ஃபிரேன்சிஸ் ஆப் அஸிஸி தேவாலயமும், கன்னி மாடமும் இங்கிருந்து கல்லெறியும் தூரத்திலேயே அமைந்திருக்கிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat