Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாஞ்ச்கணி » வானிலை

பாஞ்ச்கணி வானிலை

ஐந்து மலைகள் சூழ அமைந்திருக்கும் பாஞ்ச்கணியில் வருடம் முழுவதுமே மிதமான தட்பவெப்ப நிலை வாய்க்கப் பெற்றிருப்பதால் எப்போதுமே குளுமை நிறைந்தே இப்பிரதேசம் காணப்படுகிறது. ஆகவே பாஞ்ச்கணியை கோடைக்காலம் தவிர்த்து எப்போது வேண்டுமானாலும் விஜயம் செய்து சுற்றிப்பார்த்து மகிழலாம்.

கோடைகாலம்

பாஞ்ச்கணியில் கோடைக்காலம் மார்ச் மாதத்தில் துவங்கி மே மாதத்தில் முடிவடைகிறது. இக்காலகட்டத்தில்   அதிக பட்சம்  35°C வரை உயரும் வெப்பம் 20°C வரை குறைந்தும் காணப்படும். ஈரப்பதமும் மிகக் குறைவாக இப்பருவத்தில் காணப்படும். ஸ்ட்ராபெர்ரி திருவிழா கோடைக்காலத்தில்  தான் நடக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

மழைக்காலம்

மழைக்காலமானது பாஞ்ச்கணியில் ஜுனிலிருந்து செப்டம்பர் வரை நீடிக்கின்றது. மிதமான மழையை ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதி பெறுகிறது. பொதுவாக பயணிகள் பாஞ்ச்கணியை விஜயம் செய்ய இப்பருவத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.

குளிர்காலம்

குளிர்காலத்தின்போது வெப்ப நிலை 17°C ஆக குறைந்து காணப்படுகிறது. டிசம்பரிலிருந்து பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்காலம் பாஞ்ச்கணியை சுற்றிப்பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற பருவமாகும்.