பன்ஹாலாவுக்கு விஜயம் செய்யும்போது தவறாமல் பார்க்க வேண்டிய மற்றொரு வரலாற்றுச்சின்னம் இந்த அம்பர்கானா கோட்டையாகும். மராத்தாக்களின் ஆட்சியில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை இன்றும் உறுதியுடன் நீடித்தி நிற்கிறது.
ஆட்சி அலுவலகம் மற்றும் அரண்மனைக்கருவூலம் போன்றவை இந்த கோட்டையில் அமைந்துள்ளன. இதன் அருகாமையிலுள்ள பழமையான கட்டிடம் தன்யாஞ்சா கோத்தார் என்று அழைக்கப்படுகிறது. இது தானியக் கிடங்காக அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு கங்கா, யமுனா மற்று சரஸ்வதி என்ற மூன்று களஞ்சியங்கள் தானியங்களை சேகரித்து வைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் 25000 காண்டி அளவு தானியத்தை சேகரிக்கக்கூடிய கொள்ளளவைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications