பன்ஹாலா பகுதியில் முக்கியமான சிற்றுலாத்தலம் இந்த எம்ப்ரஸ் பொட்டானிக்கல் கார்டன் எனும் பூங்கா தோட்டமாகும். உயரமான மரங்கள் மற்றும் பரந்த புல்வெளிகளுடன் காட்சியளிக்கும் இந்த பூங்கா தோட்டம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக உள்ளது.
இந்த பூங்கா தோட்டத்தின் வாயிலில் ஒரு அலங்கார வளைவுடன் கூடிய நுழைவாயில் உள்ளது. மேலும், அருகாமையிலேயே பண்ட் கார்டன் எனும் மற்றொரு பூங்கா தோட்டமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பயணிகள் இங்கு படகுச்சவாரி மற்றும் குதிரைச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஈடுபடலாம்.



Click it and Unblock the Notifications