ஸ்ம்ருதி உதயன் என்பது 1999-ம் ஆண்டில் பாரதீப்பில் வீசிய சூறாவளியில் சிக்கி தங்களூடைய இன்னுயிர்களை நீத்த மக்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள ஒரு பூங்கா ஆகும்.
சூறாவளியில் இன்னுயிர் ஈந்த மக்களின் நினைவாக இந்த பூங்காவில் உள்ள தோட்டத்தில் ஒரு அழகிய நினைவுச் சின்னம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு உள்ள தோட்டத்தில் அனைத்து வகையான வண்ணமயமான மலர்களும் அங்கு வரும் பார்வையாளர்களை வரவேற்கின்றது.
இங்கு உள்ள அழகாக செதுக்கப்பட்ட சிற்பங்கள் ஸம்ருதி உதயனின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. இந்த தோட்டத்தை சுற்றுலா பயணிகள் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டும்.
இந்த தோட்டத்தில் உள்ள இசை நீரூற்றுகள் 1990 ம் ஆண்டு புயலை நினைவுபடுத்துகின்றது. அது இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் ஆன்மாவை உருக வைத்து விடுகின்றது.
நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் இங்கு உள்ள அனைத்து மலர்களும் பூத்துக் குலுங்கும். அப்பொழுது இந்த பூங்காவை தரிசிக்கும் பயணிகளின் மனதானது மயங்கி விடும்.



Click it and Unblock the Notifications