கங்கை நதிக்கரையில் கம்பீரமாக நிற்கும் பதர் கி மஸ்ஜித், சயீஃப் கானின் மசூதி, சிம்மி படித்துறை மசூதி மற்றும் சங்கி மஸ்ஜித் என்ற பெயர்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஜஹாங்கீரின் மகன் பர்வேஸ் ஷாவினால் நிறுவப்பட்ட இந்த கட்டிடம் கல்லால் கட்டப்பட்டுள்ளதனால் பதர் கி மஸ்ஜித் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.
உள்ளூர் இஸ்லாமிய சமூகத்தினரால் பெரிதும் மதிக்கப்படும் பதர் கி மஸ்ஜித், அதன் ஆன்மீக செயல்பாடுகளையும் தாண்டி, பாட்னா சுற்றுலாவின் பிரதான அடையாளமாகத் திகழ்கிறது.



Click it and Unblock the Notifications