சூஃபி மதத்தின் பழங்கால மையமாக போற்றப்பட்டு வரும் ஃபுல்வாரி ஷரிஃப், மேன்மைமிகு சூஃபி துறவிகள் பலரும் அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும் திகழ்ந்திருக்கிறது. பழங்காலத்தைச் சேர்ந்த சூஃபி துறவிகள் பீஹாரை ஆன்மீக, சமூக மற்றும் கலாச்சார முன்னேற்றங்களுக்கான தலைமையகமாக மாற்றியுள்ளனர்.
அதே போல், ஃபுல்வாரி ஷரீஃப், அன்பு மற்றும் சகிப்புத்தன்மையை பரப்பி வந்த சூஃபி துறவிகளின் மனதுக்கு மிகவும் நெருக்கமான இடமாக இருந்துள்ளது.
வளமான கட்டுமானப் பின்னணியுடன் சிவப்பு வண்ணத்தில் கட்டப்பட்டுள்ள பிரபலமான சங்கி மஸ்ஜித்தும் இங்கு தான் உள்ளது. இந்த மசூதிக்கு அருகிலேயே லால் ஷா பாபாவின் பிரார்த்தனை மையமும் அமையப்பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications