இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்தின் அடையாளமாக மஸாஹரூல் ஹக் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சதாகத் ஆசிரமம், பீஹார் மாநிலத்தின் சுதந்திரப் போராட்டத் தலைமையகமாக செயலாற்றி, அப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியாகிய டாக்டர். ராஜேந்திர பிரசாத் அவர்கள், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தன் வாழ்நாளின் பெரும்பகுதி நாட்களை இங்கு தான் செலவழித்திருக்கிறார். அவரது உடைமைகளை காட்சிக்கு வைத்திருக்கும் அருங்காட்சியகம் ஏராளமான மக்கள் கூட்டத்தை இங்கு ஈர்க்கிறது.



Click it and Unblock the Notifications