தக்த் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப், பாட்னா

முகப்பு » சேரும் இடங்கள் » பாட்னா » ஈர்க்கும் இடங்கள் » தக்த் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்

தக்த் ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் அல்லது பாட்னாவின் குருத்வாரா, சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் ஜி அவர்களின் நினைவாக, மஹாராஜா ரஞ்சித் சிங் அவர்களால் கட்டப்பட்டுள்ளது.

இந்த குருத்வாரா மிக நிச்சயமாக இந்தியாவின் கிழக்குப் பகுதிகளின் சீக்கிய வேராகத் திகழ்கிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இங்கு தங்க முலாம் பூசப்பட்ட தொட்டில் (பங்குரா என்ற பெயரில் அழைக்கப்படுவது) போன்ற குரு கோவிந்த் ஜியின் தனியுடைமைகள் பலவற்றைக் காணலாம்.

இந்த சீக்கிய கோயில் ஒரு கட்டுமான அற்புதமும் கூட. இங்குள்ள கம்பீரமான வெள்ளை நிற குவிமாடங்களும், பெரும் வியப்பில் ஆழ்த்தக்கூடியது போல் வடிவமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளும், அவற்றின் ஊடாக பின்னப்பட்டுள்ள வலை வேலைப்பாடுகளும் காண்போரைக் கட்டிப் போடக்கூடியவையாகும்.  

Please Wait while comments are loading...