மீன்பிடித்தல், பவுரி

பவுரியில் இருக்கும் முக்கியமான அம்சம் மீன்பிடித்தல் ஆகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு பாய்ந்து வரும் நாயர் ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்து மகிழலாம்.

மேலும் இந்த ஆற்றில் நீச்சல் அடித்து விளையாடலாம். நாயர் பள்ளத்தாக்கு இயற்கை அழகால் நிறைந்திருக்கிறது. இங்கிருக்கும் சத்புலி பகுதியிலும் மீன்பிடித்தலும், நீச்சலும் மிகவும் பிரபலமாக இருக்கின்றன.

அதோடு பவுரி பகுதியில் அரசும் மற்றும் தனியார் நிறுவனங்களும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளைக் கட்டி வைத்திருக்கின்றன. எனவே பவுரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு சிரமபப்படத் தேவையில்லை.

Please Wait while comments are loading...