பவுரியிலிருக்கும் இன்னுமொரு அழகிய சுற்றுலாத் தளம் டூட்டடோலி ஆகும். இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 3100 மீ உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால், பேருந்து மூலம் பயணம் செய்து, தலிசைன் என்ற கிராமத்தில் இறங்கி, பின் 24 கிமீ தூரம் பனிச்சறுக்கு மூலம் செல்ல வேண்டும்.
இந்த பகுதி அடர்ந்த காடுகளால் சூழப்பட்டிருக்கிறது. மேலும் இமய மலையின் சிகரங்கள் இந்த பகுதியை சுற்றி அரண்களாக இருக்கின்றன. கர்வாலின் சுதந்திர போராட்ட வீரர், வீர் சந்திர சிங் கர்வாலி இந்த பகுதியில் இருக்கும் இயற்கை அழகால் கவரப்பட்டதனால் இந்த பகுதியில் அவருக்கு ஒரு நினைவிடம் எழுப்பப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications