பிலானி நகருக்கு இயற்கை அளித்த கொடைகளில் ஒன்று இந்த ஷிவ்கங்கா ஆகும். இதுவும் சாரதா கோயிலை போன்றே பி.ஐ.டி.ஸ் பிலானியின் வித்ய விஹார் வளாகத்தினுள்ளே அமைந்திருக்கிறது.
இந்த பேரழகு வாய்ந்த பூங்கா 400 மீட்டர் சுற்றளவு கொண்ட வட்ட வடிவிலான கால்வாய் ஒன்றினால் சூழப்பட்டுள்ளது. மேலும் இந்த பூங்காவின் மத்தியிலே கால்வாய் சூழ அமைந்திருக்கும் சிவபெருமானின் சிலை காண்போரை பார்த்த மாத்திரத்தில் சொக்க வைத்து விடும்.
இதன் அமைதிக்காகவும், இயற்கை அழகை ரசிப்பதற்காகவும் மாணவர்களும், பிலானி நகரவாசிகளும் மாலை வேலைகளில் இந்த பூங்காவுக்கு வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications