திருமூர்த்தி அணைக்கு அடுத்தாற் போல் உள்ள திருமூர்த்தி மலையில், திருமூர்த்தி கோயில் உள்ளது. ஸ்ரீ அமரலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் திருமூர்த்தி மலையை ஒட்டியவாறு ஒரு நீரோடை ஓடுகின்றது.
அத்தரி மஹரிஷியும், ரிஷி பத்தினியான அனுசூயா தேவியும் இம்மலையில் வாழ்ந்து வந்ததாகவும், அவர்களின் பக்தியை சோதிக்கும் நோக்கில் மும்மூர்த்திகள் இங்கு வந்ததாகவும் சான்றோர்கள் கூறுகின்றனர்.
அவ்வாறு வருகை தந்த மும்மூர்த்திகள், அனுசூயா தேவியை நிர்வாணமாக தங்களுக்கு நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று சொல்ல, அவரும் அதை ஏற்றுக் கொண்டு, மும்மூர்த்திகளையும், குழந்தைகளாக்கி, அவ்வாறே அவர்களுக்கு அமுதூட்டினார்.
மும்மூர்த்திகளும், இத்தம்பதியை ஆசிர்வதித்துச் சென்றனர். அதனால், இம்மலை, மும்மூர்த்திகளின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications