ஒடிஷாவின் மிகப் பிரபலமான கோயில்களுள் ஒன்றான ஜகன்னாதர் கோயில், பூரியின் கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது. ஜகன்னாதர், (“ஜகத்தை ஆள்பவர்” என்ற அர்த்தம் கொண்ட பெயர்), பாலபத்ரா மற்றும் சுபத்ரா தேவி ஆகிய முக்கடவுளர்களும் அருள் பாலிக்கும் ஜகன்னாதர் கோயிலுக்கு நிம்மதியை நாடி எண்ணிலடங்கா பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.
கம்பீரமான தெய்வாம்சத்துடன் கூடிய இந்த கோயில் உங்களை புராதன யுகத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய வல்லமை வாய்ந்ததாகும். கண கணவென்ற மணியோசை, 65 அடி உயரத்துடன் கூடிய மிகப் பெரிய கூம்பு வடிவ கோபுரம், ஒவ்வொரு நுட்பமான தகவலும் கவனமாக செதுக்கப்பட்டுள்ள சுவர்கள், கிருஷ்ண பகவானின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் தூண்கள் ஆகியவையும், இன்ன பிறவும் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்களை ஜகன்னாதர் கோயிலுக்கு வரச்செய்கின்றன.
வருடா வருடம் ஏற்பாடு செய்யப்படும், ரத யாத்திரை என்றழைக்கப்படும் தேர்த்திருவிழாவின் போது இங்கு வருகை புரியும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும்.
இத்திருவிழாவின் போது, ஜகன்னாதர், சுபத்ரா மற்றும் பாலபத்ரா ஆகியோரின் திருவுருவச்சிலைகளைத் தாங்கிய தேர்கள், நன்கு அலங்கரிக்கப்பட்டு கண்டிச்சா கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் மீண்டும் ஜகன்னாதர் கோயிலில் கொண்டு வைக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications