முகப்பு » சேரும் இடங்கள் » பூரி » ஈர்க்கும் இடங்கள்
 • 01பேடி ஹனுமான் கோயில்

  பேடி ஹனுமான் கோயில்

  பேடி ஹனுமான் கோயில், அதன் பெயரே உணர்த்துவது போல், சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ள ஹனுமான் கோயிலாகும். பூரியிலுள்ள சக்ரநாராயணன் திருக்கோயிலுக்கு மேற்குப்புறத்தில், கடலுக்கு அருகில் அமைந்துள்ள இச்சிறிய கோயில், தரியா மஹாவீர் கோயில் என்றும் வழங்கப்படுகிறது.

  இதில் “தரியா” என்பது கடலையும், மஹாவீர் என்பது ஹனுமானின் மற்றொரு பெயரையும் குறிக்கின்றன. முன்னொரு காலத்தில், பூரியை கடலின் சீற்றத்தில் இருந்து காக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஹனுமான், ஜகன்னாதரிடம் சொல்லாமல் கொள்ளாமல் அயோத்திக்குச் சென்ற போது, கடல் நீர் நகருக்குள்ளே புகுந்து, கோயிலுக்கு பாதிப்பு உண்டாக்கியுள்ளது.

  இக்கோயிலின் எதிர்கால பாதுகாப்பை உத்தேசித்து, ஜகன்னாதர் ஹனுமானை ஒரு சங்கிலியால் பிணைத்து, அல்லும் பகலும் கோயிலுக்கு காவல் இருக்கும்படி உத்தரவிட்டார்.

  கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் பல்வேறு தெய்வங்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன. அஞ்சனை சிறு குழந்தையை தன் மடியில் கிடத்தி சீராட்டுவது போல் மேற்குப்புற சுவரில் சித்தரிக்கப்பட்டுள்ள ஓவியமும், அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் பெண் தெய்வங்கள் வீற்றிருப்பது போல் வடக்குப்புற பக்கவாட்டுச் சுவரில் காணப்படும் ஓவியமும், தெற்குப்புற பக்கவாட்டுச் சுவரில் காணப்படும் கணேசரின் ஓவியமும் பூரியின் கலாச்சாரப் பெருமைக்கு மேலும் அணி சேர்க்கின்றன.

  + மேலும் படிக்க
 • 02பூரி கோனார்க் கடற்கரை சாலை

  பூரி கோனார்க் கடற்கரை சாலை

  பூரி கோனார்க் கடற்கரை சாலை, பூரி மற்றும் கோனார்க் ஆகியவற்றை இணைக்கும் சுமார் 35 கி.மீ. நீள சாலையாகும். இந்த சாலை, வழி நெடுகிலும் இரு புறத்திலும் இயற்கை அழகு நிறைந்த கடற்புரக் காடுகளைக் கொண்டு எழிலுடன் காணப்படுகிறது. பூரி கோனார்க் கடற்கரை சாலையில் ஏராளமான கடற்கரை ஓய்வகங்கள் காணப்படுகின்றன.

  நீங்கள் போகும் வழியில் நிறுத்தி, ராம்சண்டி கோயில், பஞ்ச முகி ஹனுமான் கோயில் மற்றும் குப்தேஸ்வர் கோயில் ஆகியவற்றுக்கு சென்று உங்கள் பிரார்த்தனைகளை செலுத்தி விட்டு பயணத்தைத் தொடரலாம்.

  முன்பதிவு செய்து கொள்வதன் மூலம் படகு சவாரி செய்யும் வசதியுடைய சந்திரபாகா கடற்கரை இந்த சாலையில் காணப்படும் மிக முக்கியமான சுற்றுலா ஈர்ப்பாகும்.

  பூரி கோனார்க் கடற்கரையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள ராம்சாண்டி கடற்கரை ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தன்னகத்தே ஈர்க்கக்கூடியதாகும். இங்கும் படகுச் சவாரி செய்யும் வசதி உள்ளது. இந்த சாலையிலிருந்து தெரியும் சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனக் காட்சிகள் தவற விடக்கூடாத ஒன்றாகும்.

  + மேலும் படிக்க
 • 03சுவர்கத்வார்

  சுவர்கத்வார்

  சுவர்கத்வார் என்பது பூரியில் உள்ள இந்துக்களின் சுடுகாடாகும். அதன் பெயரே உணர்த்துவது போல், இந்த இடம் சுவர்க்கத்துக்கு செல்வதற்கான் நுழைவு வாயில் என்று இந்துக்களால் நம்பப்படுகிறது.

  ஏராளமான புராணக் கதைகளைக் கொண்டிருக்கும் சுவர்கத்வாருக்கு இந்தியாவெங்கிலுமிருந்து எக்கச்சக்கமான மக்கள் வருகை புரிகின்றனர். இங்கு கடற்கரைக்கு அருகில் தனது கடைசி மூச்சை இழுத்து விடுபவர் நேரடியாக சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு முக்தி பெறுவதாகக் கூறப்படுகிறது.

  ‘முக்தி’ அடையும் பொருட்டு மக்கள் சுவர்கத்வார் கடற்கரையில் நீராடுகின்றனர். புனிதமான பிரம்மதரு, மிகச்சரியாக இந்த இடத்திலிருந்து பூரி கடற்கரைக்கு மிதந்து சென்றதாக வழங்கப்படும் ஒரு கட்டுக்கதையும் இங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

  + மேலும் படிக்க
 • 04அலர்நாத் கோயில்

  அலர்நாத் கோயில்

  பூரியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பிரம்மகிரியில் உள்ள அலர்நாத் கோயில் கிருஷ்ண பகவானின் பக்தர்கள் வழிபடும் மிகப் பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலமாகும்.

  சத்திய யுகத்தின் போது, பிரம்மா ஒரு மலையுச்சியில் விஷ்ணு பகவானை வழிபட்டதாகவும், அதனை மெச்சிய விஷ்ணு பகவான், நான்கு கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை தாங்கியவாறு தோற்றமளிக்கும் விஷ்ணு சிலை ஒன்றை, ஒரே கருங்கல்லில் இருந்து உருவாக்கும்படி பிரம்மாவை கேட்டுக் கொண்டார்.

  அலர்நாத் கோயிலில் விஷ்ணு பகவான அலர்நாத் என்ற திருநாமத்துடன் வழிபடப்படுகிறார். விஷ்ணு பகவானின் வாகனமாகிய கருடனின் சிலை, விஷ்ணு சிலையின் காலடியில், முழங்காலிட்டு கைகளை கூப்பிய வண்ணம் இருப்பதையும் காணலாம்.

  கிருஷ்ண பகவானின் துணைவியரான ருக்மிணி மற்றும் சத்யபாமா ஆகியோரின் சிலைகளையும், சைதன்யரின் சிலையையும் கோயிலினுள்ளே காண முடிகிறது. சைதன்யரின் உடல் அழுத்தியதால் ஏற்பட்ட சுவடுகளைக் கொண்டிருக்கும் ஒரு கல்லும் இக்கோயிலில் காணப்படுகிறது.

  சைதன்யருக்கு அடியில் இருந்த கல்லானது, அவர் முதன் முதலில் அலர்நாத்துக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய போது கரைந்து போனதாக நம்பப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 05ஸ்ரீ கண்டிச்சா கோயில்

  ஸ்ரீ கண்டிச்சா கோயில்

  பூரி பேருந்து நிலையத்துக்கு வெகு அருகாமையில், கண்டிச்சா சதுக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கண்டிச்சா கோயில் ரத யாத்திரைத் திருவிழாவுக்கு மிகவும் புகழ் பெற்றதாகும். இக்கோயில், கண்டிச்சா கர் அல்லது கண்டிச்சா மந்திர் என்றும் அறியப்படுகிறது.

  ஸ்ரீ கண்டிச்சா கோயில், ஜகன்னாதர் கோயிலுக்கு அடுத்ததாக, பூரி ஜகன்னாதரின் இரண்டாவது பிரதான உறைவிடமாகத் திகழ்கிறது. ரத யாத்திரை நடக்கும் காலம் தவிர்த்து, இக்கோயில் பெரும்பாலும் ஆளரவமின்றியே காணப்படுகிறது.

  எனினும், இக்கோயில், ஜகன்னாதர் கோயில் நிர்வாகத்தால் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயில் கலிங்கா காலத்தைய கட்டுமான பாணியின் அசல் வார்ப்பாகத் திகழ்கிறது.

  சுமார் 75 அடி உயரமும், 430 அடி நீளமும் கொண்டு, ஒரு அழகிய தோட்டத்துக்கு மத்தியில் மெல்லிய சாம்பல் நிற மணற்பாறையினால் கட்டப்பட்டுள்ள இக்கோயில் ஒரு சுற்றுச்சுவரினால் சூழப்பட்டுள்ளது.

  திருவிழாவின் போது, ஜகன்னாதர் கோயிலிலிருந்து சிலைகள் ஸ்ரீ கண்டிச்சா கோயிலுக்கு கொண்டு வரப்படும்போது, அவை ‘ரத்னவேடி’ என்றழைக்கப்படும் சிம்மாசனத்தில் அமர்த்தி வைக்கப்படுகின்றன. இந்த சிலைகள் மேற்குப்புற நுழைவு வாயில் வழியாக நுழைந்து, கிழக்குப்புற நுழைவுவாயில் வழியாக வெளியேறுகின்றன.

  + மேலும் படிக்க
 • 06மௌஸிமா கோயில்

  மௌஸிமா கோயில்

  மௌஸிமா கோயில், ஜகன்னாதர் கோயில் மற்றும் பூரியின் கிராண்ட் சாலையில் உள்ள கண்டிச்சா கோயில் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது.

  ஜகன்னாதரின் சித்தி என்று கூறப்படுபவரும், அர்தாஸினி என்ற பெயரிலும் அறியப்படுபவருமான மௌஸிமா தேவி, பூரி நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, கடல் நீரில் பாதியைப் பருகி, பூரி நகரை காப்பாற்றியதாக நம்பப்படுகிறது.

  மேலும், மௌஸிமா தேவி, கபாலமோசன சிவனுடன் இணைந்து பூரியை அல்லும் பகலும் கண்காணித்து வருவதாக நம்பப்படுகிறது. ஜகன்னாதர் கோயில் தேர்த்திருவிழாவுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கும் வருகை தருகின்றனர்.

  இத்திருவிழாவின் போது, பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகியோரின் சிலைகளைத் தாங்கிய தேர்கள் நேரடியாக ஜகன்னாதர் கோயிலின் சிங்க துவாராவிற்கு கொண்டு செல்லப்படும் அதே வேளையில், ஜகன்னாதரின் தேர் மட்டும் மௌஸிமா கோயிலுக்கு முன் சிறிது நேரம் நின்று ‘போடா பிதா’ என்றழைக்கப்படும் அரிசி பண்டத்தை அவரது சித்தியிடம் இருந்து பெற்றுக் கொள்வதாக ஐதீகம்.

  மஹாசப்தமி மற்றும் மஹாநவமி திருவிழாக்களின் போதும் மௌஸிமா கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

  + மேலும் படிக்க
 • 07ஜகன்னாதர் கோயில்

  ஒடிஷாவின் மிகப் பிரபலமான கோயில்களுள் ஒன்றான ஜகன்னாதர் கோயில், பூரியின் கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது. ஜகன்னாதர், (“ஜகத்தை ஆள்பவர்” என்ற அர்த்தம் கொண்ட பெயர்), பாலபத்ரா மற்றும் சுபத்ரா தேவி ஆகிய முக்கடவுளர்களும் அருள் பாலிக்கும் ஜகன்னாதர் கோயிலுக்கு நிம்மதியை நாடி எண்ணிலடங்கா பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

  கம்பீரமான தெய்வாம்சத்துடன் கூடிய இந்த கோயில் உங்களை புராதன யுகத்துக்கு இட்டுச் செல்லக்கூடிய வல்லமை வாய்ந்ததாகும். கண கணவென்ற மணியோசை, 65 அடி உயரத்துடன் கூடிய மிகப் பெரிய கூம்பு வடிவ கோபுரம், ஒவ்வொரு நுட்பமான தகவலும் கவனமாக செதுக்கப்பட்டுள்ள சுவர்கள், கிருஷ்ண பகவானின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் தூண்கள் ஆகியவையும், இன்ன பிறவும் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்களை ஜகன்னாதர் கோயிலுக்கு வரச்செய்கின்றன.

  வருடா வருடம் ஏற்பாடு செய்யப்படும், ரத யாத்திரை என்றழைக்கப்படும் தேர்த்திருவிழாவின் போது இங்கு வருகை புரியும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும்.

  இத்திருவிழாவின் போது, ஜகன்னாதர், சுபத்ரா மற்றும் பாலபத்ரா ஆகியோரின் திருவுருவச்சிலைகளைத் தாங்கிய தேர்கள், நன்கு அலங்கரிக்கப்பட்டு கண்டிச்சா கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின் மீண்டும் ஜகன்னாதர் கோயிலில் கொண்டு வைக்கப்படுகின்றன.

  + மேலும் படிக்க
 • 08பூரி கடற்கரை

  வங்காள விரிகுடாவின் கரையோரத்தில் காணப்படும் பூரி கடற்கரை, பூரி இரயில் நிலைத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நகரின் பிரபல சுற்றுலாத் தலமான பூரி கடற்கரை, நீச்சலுக்கு உகந்ததான தலைசிறந்த இந்தியக் கடற்கரைகளுள் ஒன்றாக விளங்குகிறது.

  இந்துக்களால் மிகப் புனிதமானதாகக் கருதப்படும் இக்கடற்கரையில் நடத்தப்படும் வருடாந்தர பூரி கடற்கரைத் திருவிழாவின் போது காட்சிப்படுத்தப்படும் மணல் ஓவியங்கள், ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்க்கின்றன.

  சர்வதேச விருது வென்ற உள்ளூர் மணல் ஓவியக் கலைஞரான சுதர்ஸன் பட்நாயக்கின் கலைப் படைப்புகள் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடியவை; அதனால் இத்திருவிழாவின் போது நீங்கள் பூரியில் இருக்க நேர்ந்தால் கட்டாயம் சென்று பார்த்து மகிழுங்கள்.

  கடற்கரையோரத்தில் அடர் பொன்னிறத்தில் தகதகக்கும் நீளமான மணல்வெளி, உடலை வருடும் மெல்லிய தென்றல், சூரிய ஒளியில் மின்னும் தெளிவான தண்ணீர்,  சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் அற்புதக்காட்சிகள் ஆகியவை இந்த கடற்கரையை நிரந்தர ஈர்ப்பாகத் திகழச்செய்கின்றன.

  + மேலும் படிக்க
 • 09ரகுராஜ்பூர்

  இந்தியாவின் கலாச்சார வரைபடத்தில் ரகுராஜ்பூருக்கென பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரிஸ்ஸாவின் பூரி மாவட்டத்தில் காணப்படும் சிறு கிராமமான ரகுராஜ்பூர் அதன் தலைசிறந்த பட்டா சித்திர கலைஞர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். புகழ்பெற்ற ஒடிஸி நடனக்கலைஞரான கேலுசரண் மொஹபத்ரா இப்புகழ்பெற்ற கிராமத்தைச் சேர்ந்தவராவார்.

  இக்கிராமம், நேர்த்தியான துணிகளின் துண்டுகள், பேப்பர் மற்றும் காய்ந்து சருகாகிப் போன பனை இலைகள் ஆகியவற்றில் கவிதை இயற்றும் கலைஞர்களால் நிறைந்து காணப்படுகிறது.

  கடவுள் இவ்விடத்தை பனைகள், மாமரங்கள், தென்னை மரங்கள், பலா மரங்கள் மற்றும் மண்டலப் பகுதிக்குரிய இதர மரங்கள் உள்ளிட்ட ஏராளமான மரங்களால் ஆசீர்வதித்துள்ளார்.

  வீடுகளின் வெளிச்சுவர்களில், பெருங்காப்பியங்களான மஹாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவற்றிலிருந்து காட்சிகளை விரிவாக சித்தரிக்கும் சுவரோவியங்களை இங்கு சர்வசாதாரணமாகக் காண முடிகிறது.

  பெரும்பாலான வீடுகள் இரண்டு வரிசைகளில் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொள்ளும்படியான வழக்கமான பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. சிறு கோயில்கள் மற்றும் சமூகக் கூட்டங்கள் நடைபெறும் மையமாகிய பகவத் துங்கி ஆகியவை கிராமத்தின் நடுப்புறத்தில் காணப்படுகின்றன. இக்கிராமத்தின் உறைவிட தெய்வமாகிய புவாசுனி தேவிக்கு கோயில் ஒன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

  + மேலும் படிக்க
 • 10பாலிகாய் கடற்கரை

  பாலிகாய் கடற்கரை

  பாலிகாய் கடற்கரை, பூரி-கோனார்க் கடற்கரைச் சாலையில், பூரியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரிஸ்ஸாவில் உள்ள, அவ்வளவாக ஆய்வுக்கு உள்ளாகாத இந்த கடற்கரை, கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒன்று. இங்கு வருவோர் நதியின் அமைதியான நீரோட்டம், ஆர்ப்பாட்டமான கடலுடன் சேரும் காட்சியை கண்டு களிக்கலாம்.                        

  இங்கு காணப்படும் ஒரு அமானுஷ்யமான ஈர்ப்பு சக்தி, நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து பயணிகளை இங்கு வரவழைப்பதோடு, அயல்நாட்டவரை வியப்புக்குள்ளாக்குவதாகவும் விளங்குகிறது.

  ரம்மியமான வானிலை மற்றும் கடற்கரையோரம் அலைமோதும் தண்ணீர் ஆகியவற்றுடன் திகழும் இந்த இடம் அழகுக்கு உதாரணமாக தோற்றமளிக்கிறது. இக்கடற்கரை சூரிய ஒளிக் குளியலில் ஆர்வம் உடையவர்களுக்கான மிகச் சிறந்த இடமாகும்.

  இந்த இடம் சுவாரஸ்யமான படகு சவாரிகளையும் வழங்குகிறது. புத்துணர்வூட்டக்கூடிய இடமான இங்கு, பயணிகள் எவ்வித தடையும் இன்றி கடலில் நீந்தி தம் உடல், உள்ளம் மற்றும் ஆன்மா ஆகியவற்றிற்கு புத்துயிர் அளிக்கலாம்.

  தெளிவான நீரைப் பார்த்துக் கொண்டே, பொன்வண்ணத்தில் தகதக்கும் சுத்தமான மணலில் நடந்து செல்வது பேருவகை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.    

  + மேலும் படிக்க
 • 11சதபடா டால்பின் சரணாலயம்

  சதபடா டால்பின் சரணாலயம்

  சதபடா டால்பின் சரணாலயம் பூரியிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் டால்பின்களோடு சூரிய அஸ்த்தமனம் மற்றும் சூர்யோதய காட்சிகளுக்கும் பிரபலமாக இருப்பதால் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.

  இங்கு டால்பின்களை பார்த்து ரசிப்பதற்காக டால்பின் வியூ பாயிண்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் டால்பின் மோட்டார் போட் கழகம் ஏற்பாடு செய்யும்  மோட்டார் படகுப்பயணத்தில் நீங்கள் குடும்பத்தோடு ஈடுபட்டு பொழுதை இன்பமயமாக கழிக்கலாம். இந்த படகுப் பயணத்துக்கு சிறிய அளவிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 12பலிஹார் சண்டி கோயில்

  பலிஹார் சண்டி கோயில்

  துர்க்கை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பலிஹார் சண்டி கோயில், பிரம்மகிரி மற்றும் சதபடாவை நோக்கிப் பயணிக்கையில், பூரிக்கு தென்மேற்குப்புறத்தில் சுமார் 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

  இந்த அழகிய கோயில், கடலுக்கு வெகு அருகில் ஒரு மணற்பாறையின் மேல் காணப்படுகிறது. துர்கா தேவியை பக்தர்கள் பலிஹார் தேவி என்ற பெயரில் இங்கு வழிபட்டு வருவதால் இக்கோயில் இப்பெயரைக் கொண்டு விளங்குகிறது.

  அஷ்வினாவில் வரும் மகாநவமி நாளில் கொண்டாடப்படும் சடங்கினால், பூரியில் உள்ள ஏனைய கோயில்களைப் போன்றே இக்கோயிலும், ஜகன்னாதர் கோயிலுடன் தொடர்பு கொண்டுள்ளது.

  ஒரு மண்டையோட்டையும், ஒரு வெட்டப்பட்ட தலையையும் தன் இடக்கையில் பிடித்துள்ளவாறு அலிதா பாவத்துடன் நின்ற நிலையில், சிவபெருமானின் உடலில் உள்ளவாறு காட்சியளிக்கும் காளி தேவியின் ஓவியம் ஒன்று, கோயிலின் பின்புறத்தில் உள்ள ராஹபாகாவின் அடிவாரத்தில் காணப்படுகிறது.

  பார்கவி நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஒரு யாத்ரீக ஸ்தலமாக மட்டுமின்றி இயற்கை அழகு மிகுந்த ஒரு இடமாகவும் காட்சியளிக்கிறது. பார்கவி நதி கடலோடு சேரும் இடத்தில் அமைந்துள்ளது இக்கோயில்.

  + மேலும் படிக்க
 • 13சக்ர தீர்த்தா கோயில்

  சக்ர தீர்த்தா கோயில்

  ஜகன்னாதர் கோயிலிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், பூரியின் வடக்குப்புற முனையில் அமைந்துள்ள சக்ர தீர்த்தா கோயில் ஒரு முக்கிய யாத்ரீக ஸ்தலமாகும். இக்கோயில் சக்ர நாராயணா கோயில் என்றும், சக்ர நரசிம்மா கோயில் என்றும் சக்ர நர்சிங்கா கோயில் என்றும் பலவாறாக வழங்கப்படுகிறது.

  ஜகன்னாதரின் தெய்வீக ஆயுதமான சக்ராயுதத்தைக் குறிக்கும் வண்ணம், தண்ணீரில் ஒரு மிகப் பெரிய சக்கரம் கறுப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டு, சக்ரநாராயணா என்ற திருநாமம் கொண்ட நாராயணரின் திருவுருவச்சிலை அதற்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது.

  முன்னொரு சமயத்தில், புயல் ஒன்று பூரியை தாக்கிய போது, ஜகன்னாதர் கோயிலின் மேற்பகுதியில் இருந்த சக்கரம் வானில் பறந்து சக்ரதீர்த்தத்தில் விழுந்ததாகவும், அதே சமயத்தில், ஜகன்னாதர் கோயிலில் உள்ள தெய்வங்களின் சிலைகளை செதுக்க உதவிய தரு என்ற ஒரு மரக்கட்டை கடல் வழியாக பயணித்து வந்து, முதன் முறையாக சக்ரதீர்த்தத்தின் நிலத்தைத் தொட்டதாகவும் நம்பப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 14ஸ்ரீ லோக்நாத் கோயில்

  ஸ்ரீ லோக்நாத் கோயில்

  உலகளவில் பிரசித்தி பெற்றுள்ள பூரி ஜகன்னாதர் கோயிலுக்கு அடுத்து பிரபலமாக உள்ள கோயில் ஸ்ரீ லோக்நாத் கோயில் ஆகும். ஜகன்னாதர் கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

  சிவபெருமான், சனிபகவானின் பார்வையில் படாமல் தப்பிக்க இக்கோயில் குளத்தில் தான் மறைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் காணப்படும் சிவலிங்கம், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நம்புகின்றனர்.

  பார்வதி குளத்துக்கு அருகில் உள்ள ஒரு இயற்கை நீரூற்று, சிறிய செவ்வக வடிவிலான கொள்கலனில் வீற்றிருக்கும் இந்த லிங்கம் எப்போதும் நீரில் இருக்கும்படி தொடர்ந்து நீரை சுரந்து வருகிறது.

  லிங்கத்தை முழுதாக தரிசிக்க விரும்பும் பக்தர்கள், எல்லா நீரும் வாரி இறைக்கப்படும், சிவராத்திரிக்கு முந்தைய இரவான ‘பங்கதர் ஏகாதசி’ அன்று, அவ்வாறு தரிசித்து வழிபடலாம்.

  லோகநாதரின் தெய்வ அருள், அனைத்து வலிகளையும், மனவேதனைகளையும் களையக்கூடிய சக்தி வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. பல்வேறு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டோர், இங்கு வந்து வழிபட்டு தங்கள் நோய்களிலிருந்து நிவாரணம் பெற்றிருக்கின்றனர்.

  + மேலும் படிக்க
 • 15கோவர்த்தன் மடம்

  கோவர்த்தன் மடம்

  போகோ வர்த்தன் மடம் என்று பொதுவாக குறிப்பிடப்படும் கோவர்த்தன் மடம், பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சந்நியாசிகளை ஒன்று சேர்க்கும் பொருட்டு ஆதி சங்கரரால் 8 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட நான்கு தலைமை மடங்களுள் ஒன்றாகும்.

  ரிக் வேதத்தை தன் பொறுப்பில் கொண்டுள்ள கோவர்த்தன் மடம் பூரி நகரினுள்ளே அமைந்துள்ளது. இந்த மடாலயம், ஜகன்னாதர் (பைரவர்) மற்றும் விமலா தேவி (பைரவி) ஆகியோர் மூலக்கடவுளர்களாக வழிபடப்படும் ஜகன்னாதர் கோயிலுடன் சரித்திர ரீதியிலான தொடர்புகளைக் கொண்டுள்ளது.

  இந்த மடாலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் ஆன்மீகம் மற்றும் பற்றற்ற வாழ்வின் தாத்பர்யத்தை நன்கு உணரலாம். ஒரு வேதபாட சாலை, ஒரு யோகா பள்ளி, விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் வியாயாம ஷாலா, யாத்ரீகர்கள் மட்டுமின்றி பூரியிலேயே வாழும் உள்ளூர்வாசிகளுக்கும் இலவச மருத்துவ சிகிச்சையளிக்கும் ஒரு மருத்துவ நிலையம் மற்றும் சுமார் 70 பசுக்களின் உறைவிடமாகத் திகழும் ஒரு மாட்டுத் தொழுவம் ஆகியவை இம்மடாலயத்தின் நவீன கால செயல்பாடுகளாகும்.

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Feb,Tue
Check Out
21 Feb,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed