சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள மிகச்சிறந்த அருங்காட்சியகங்களில் ஒன்றாக திகழும் இந்த மஹந்த் கஸிதாஸ் மியூசியம் ராய்பூர் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. இது டி.கே மருத்துவமனைக்கு அருகில் அமைந்திருக்கிறது.
ராஜா மஹந்த் கஸிதாஸ் என்பவரால் 1875ம் ஆண்டு இந்த மியூசியம் கட்டப்பட்டிருக்கிறது. இரண்டு அடுக்குகளுடன் கட்டப்பட்ட இந்த வளாகம் பின்னர் ஜோதி தேவி ராணி மற்றும் அவரது மகன் திக்விஜய் தாஸ் ஆகியோரால் 1953ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.
தற்போது இந்த அருங்காட்சியக வளாகம் 2 ஹெக்டேர் அளவில் பரந்து காணப்படுகிறது. ஆயுதங்கள், புராதன நாணயங்கள், கல்வெட்டு குறிப்புகள், சிலைகள் மற்றும் சிற்பக்குடைவு வேலைப்பாடுகள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications