தார் சுற்றுலாவின் முக்கியமான அங்கமாக ஹஸ்ரத் பீர் ஃபதெஹுல்லஹ் ஷா பாபா உள்ளது. இந்த கோயில் அதன் இறைத்தன்மைக்காக நாடு முழுவதும் அறியப்படுகிறது.
மக்கள் தினமும் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து மகான் ஹஸ்ரத் பீர் ஃபதெஹுல்லஹ் ஷா பாபாவின் அருள் வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். இங்கு உண்மையுடனும், நேர்மையுடனும் மேற்கொள்ளப்படும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாக நம்பப்படுகிறது.
அதற்கு இங்கு வரும் பக்கதர்களின் நல்வாழ்க்கையே சான்றாக இருக்கிறது. பக்கதர்களும் அவர்களுக்கு கிடைத்த நல்வாழ்க்கையானது மகான் ஹஸ்ரத் பீர் ஃபதெஹுல்லஹ் ஷா பாபாவின் ஆசீர்வாதம் என நம்புகின்றனர்.
அனைத்து மதங்கள் மற்றும் அனைத்து தரப்புகளையும் சார்ந்த மக்கள் இங்கு எவ்வித பாகுபாடும் இன்றி அனுமதிக்கப்படுகின்றனர். ஆகவே இந்த கோவில் இந்தியாவின் மத ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்கு சான்றாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications