சம்பரண் நகரம் முற்காலத்தில் சம்பஜார் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இது ராஜிம் நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற வைணவ பீடமாக அறியப்படும் இந்த சம்பரண் வல்லபாச்சாரியா எனும் யோகி அவதரித்த ஸ்தலமாகும். வல்லப வைணவ மரபை உருவாக்கிய ஆச்சாரியார் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பரண் கோயில் வளாகம் முழுதுமே வெண் பளிங்குகற்களால் உருவாக்கப்பட்டு காட்சியளிக்கிறது. ஒரு ஆன்மிக அமைதிச்சூழலை பார்வையாளர்கள் இந்த கோயில் ஸ்தலத்தில் உணர முடியும்.
வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஒரு அற்புதமான கட்டிடக்கலை படைப்பாகவும் இந்த கோயில் தோற்றமளிக்கிறது. பிரம்மாண்டமான தூண்கள் மற்றும் தோரண வளைவுகளை தனது கட்டமைப்பில் கொண்டுள்ள இந்த கோயிலின் உள்முற்றத்தில் வல்லபாச்சாரியாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் சிற்பங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நகரத்தில் வல்லபாச்சாரியாரை கௌரவிக்கும் விதமாக மற்றொரு கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. இது சுதாமாபுரி என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் குஜராத்தி பக்தர்கள் இந்த கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் குறிப்பாக சிரவண மாதத்தின்போது விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications