ராஜோவ்ரிக்கு 25 கிமீ வடகிழக்கில் அமைந்துள்ள கோப்பை வடிவ பள்ளத்தாக்கு தான் தர்ஹால் மால்கன். இந்த பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அழகிய மலைப்பகுதிள் அமைந்துள்ளதை காண்பார்கள்.
அவர்கள் சற்றே கூர்ந்து நோக்கும் போது, இவ்விடம் இயற்கையாகவே ஒரு விளையாட்டு மைதானத்தைப் போல அமைந்திருப்பதையும் அறிவார்கள்.
சுற்றுலாப் பயணிகளுக்கு நேரமிருந்தால், இவ்விடத்திற்கு அருகிலுள்ள காஞ்ச்பாபா, கான்கா என்ற மத வழிபாட்டுத்தலத்திற்கும் சென்று வரலாம். தர்ஹால் மால்கனிலிருந்தபடியே, ஆண்டு முழுவதும் நீர் பொங்கி வருகிற தர்ஹால் தாவி என்ற ஊற்றையும் சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.



Click it and Unblock the Notifications