ராஜோவ்ரியிலிருந்து 7 கிமீ தொலைவில் இருக்கும் முராத்பூர் நகரத்தில், முராத்பூர் சாராய் என்ற மத்திய கால தலம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் நான்கு பக்கமும் மூடப்பட்டிருக்கும் வகையிலான சுவர்களில் உள்ள கோட்டை கொத்தளங்களைக் காண முடியும்.
கட்டுவதற்கு மிச்சம் மீதிகளாக இருந்த சுண்ணாம்பு பாறைகளால் கட்டப்பட்டிருக்கும் இந்த சுவர்கள், ஒவ்வொரு பக்கமும் சுமார் 30 மீ நீளம் கொண்டாதாக இருக்கின்றன.
சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தில் 6.30 மீ அளவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளையும் காணலாம். முராத்பூர் சாராயிலிருந்து 1 கிமீ தொலைவிலேயே ஒரு மசூதி மற்றும் சபைக்கூடத்தின் எஞ்சிய தடயங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.



Click it and Unblock the Notifications