தியா சார் காலிக்கு சற்று கீழாக பாடியரன் சார் ஒன்று மற்றும் இரண்டு என்ற இரட்டை ஏரிகள் அமைந்துள்ளன. இந்த ஏர்pகள் கடல் மட்டத்திலிருந்து 3400 மீ உயரத்தில் அமைந்துள்ளன. இரண்டு ஏரிகளும் பீன் வடிவத்தில் இருந்தாலும், அளவுகளை வைத்து பார்க்கும் போது பாடியரன் I ஏரி, பாடியரன் II-ஐ விட சற்று பெரிய ஏரியாகும்.
வருடத்தின் பெரும்பாலான நாட்கள் இந்த ஏரிகள் பனிப்படலத்தால் மூடப்பட்டிருக்கும். பாடியரன் ஒன்று மற்றும் இரண்டு ஏரிகளை பார்வையிட விரும்பும் சுற்றுலாப் பயணிகள் 3800 மீ உயரத்தில் அமைந்திருக்கும் தியா சார் காலியை அடைந்து, அங்கிருந்து 1 கிமீ செங்குத்தான சிகரப்பகுதிகளில் இறங்கினால் மட்டுமே அடைய முடியும்.



Click it and Unblock the Notifications