கனேராவ் என்றழைக்கப்படும் இந்த கிராமத்தில் பல அழகிய சிறு ஹிந்துக்கோயில்கள் அமைந்துள்ளன. பிரசித்தமான ரணக்பூர் சுற்றுலாத்தலத்துக்கு அருகிலேயே அமைந்திருப்பதால் இது சுற்றுலாப்பயணிகளை கவரும் இடமாக திகழ்கிறது.
இப்பிரதேசத்தில் உள்ள 11 ஜெயின் கோயில்களில் முச்சல் மஹாவீர் கோயில் மற்றும் கஜானந்த் கோயில் ஆகிய இரண்டும் பிரசித்தமானவை ஆகும். கஜானந்த் கோயிலில் பக்தர்கள் அழகிய விநாயகர் சிலைகளுடன் ரித்தி மற்றும் சித்தி சிலைகளையும் காணலாம். விநாயகக்கடவுள் சிலைக்கு இருபுறமும் காணப்படும் ஹனுமான் மற்றும் பைரோ பாபா சிலைகள் விநாகரின் பாதுகாவலர்களாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications