ரத்னகிரியில் உள்ள திலக் அலி மியூசியம் எல்லோராலும் விரும்பி பார்க்கப்படும் ஒரு அருங்காட்சியகமாகும். புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரரான லோகமான்ய திலகரின் பூர்வீக வீடான இந்த அருங்காட்சியகத்தில் பல அரிய கொங்கண கலைப்பொருட்கள் காட்சிக்கு கொண்டுள்ளன.
மேலும் இந்த மியூசியத்தில் திலகரின் வாழ்க்கை வரலாற்றினை பல ஓவியங்கள் வரைபடங்கள் மூலம் விளக்கும் காட்சி அம்சங்களும் உள்ளன. இங்கு வரும் பயணிகள் ஒரு உன்னத தலைவரின் வாழ்க்கை வரலாற்றையும் சுதந்திரப் போராட்டத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.



Click it and Unblock the Notifications