கிராமப்புற சுற்றுலாவை ஊக்குவிக்கும் இடமான இந்த கியுசிங் கிராமம் ரவங்க்லாவிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் கிராமப்புற வாழ்க்கையையும் சிக்கிமின் உபசரிப்பையும் அனுபவிக்கலாம்.
சிக்கிமின் பூட்டியா மொழியில் கூறப்படும் கியுசிங் என்றால் ”கோதுமை நிலம்” என்று அர்த்தம். இது கடல் மட்டத்தில் இருந்து 1700 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இங்கு எழுப்பப்பட்டிருக்கும் பூர்வீக நம்பிக்கை சின்னமான பான் மடம் சிக்கீமின் பூர்வீக இனத்தவரால் தங்கள் மத நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரியங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு எழுப்பப்பட்டது.



Click it and Unblock the Notifications