தென் சிக்கீம் மாவட்டத்தின் ஒரு சிறிய நகரம்தான் தின்கிதம். சிக்கீம் மாவட்ட தலைமையகத்தில் இருந்து தின்கிதம் அடைய 45 நிமிடங்கள் ஆகும்.
இவ்விடம் ஏலக்காய் தோட்டத்திற்கு பிரபலம். அதோடு இங்கிருந்து கஞ்சன்ஜங்கா மலையின் அழகை முழுமையாகக் காண முடியும். ”பாபியோபெடிலும் ஃபைரினும்” என்ற ஒரு வகை அரிய மலர் இங்கு பிரபலம். இந்த மலர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பூக்கின்றது.
இவ்விடம் நவீன நாகரிகத்தின் வாசனையிலிருந்து முழுவதுமாக ஒதுங்கி மின்சாரம், கேபிள் அல்லது சரியான சாலைகள் பொன்ற வசதிகள் எதுவும் இல்லை என்றாலும் இதன் அழகை ரசிக்க விரும்பினால் ஆர்வத்துடன் இவ்விடம் பயணம் செய்து இயற்கை அழகை அனுபவிக்கலாம்.



Click it and Unblock the Notifications