Search
  • Follow NativePlanet
Share

ரெடி - புதுமையான கடற்கரை கிராமம்

3

ரெடி என்று அழைக்கப்படும் ரெடிப்பட்டணம், பிரம்மாண்டமான அரபிக்கடலின் ஓரத்தில், எண்ணிலடங்கா முந்திரி மரங்களும், உயரமான தென்னை மரங்களும் சூழ பூலோக சொர்கமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில், வெங்குர்ல தாலுக்கா பகுதியில் அமைந்திருக்கும் ரெடி கிராமம், முன்னொரு காலத்தில் அப்பகுதியின் முக்கியமான துறைமுகமாக இருந்து வந்தது .

இதன் கால் படாத கன்னிக் கடற்கரையின் காரணமாகவும், யஸ்வந்த்காட் கோட்டை போன்ற தொன்மையான நினைவுச் சின்னங்களுக்காகவும் ரெடி கிராமம் இன்று புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

ரெடியில் உள்ள சுயம்பு சிவன் கோயில், கணபதி கோயில், மௌலி கோயில், ராம்புருஷ் மற்றும் நவதுர்கா ஆலயங்கள் போன்றவை பிரசித்திபெற்ற ஆன்மீக ஸ்தலங்கள் ஆகும். அதே போல் யஸ்வந்த்காட் கோட்டை, ஷிரோடா, அரவலி, தெரிகோல் கோட்டை உள்ளிட்ட நினைவுச் சின்னங்களும் ரெடியில் பார்க்க வேண்டிய இடங்கள்.

ரெடி கிராமம் இயற்கையாக அமைந்த சொர்க்கம் என்றே சொல்லலாம். அதன் பரந்து விரிந்து கிடக்கும் கடற்கரையின் ஓரங்களில் ஓங்கி உயர்ந்து நிற்கும் தென்னை மரங்களும், காய்த்து குலுங்கும் மாமரங்களும் அந்த பிரதேசத்தையே பொன்னுலகமாக படைத்திருக்கிறது. அதோடு முந்திரி மற்றும் கொட்டைப்பாக்கு மரங்களும் கரையோரங்களில் செழித்து வளர்ந்திருக்கின்றன.

ரெடியின் வெப்பநிலை வருடம் முழுவதும் சுற்றுலா வருவதற்கு ஏற்றதாகவே இருக்கும். எனினும் பயணிகளுக்கு ரெடியின் கோடை சற்று கடுமையானதாக தெரியலாம். எனவே அவர்கள் குளிர்த் தென்றல் வீசும் பனிக் காலத்திலோ, முன்பனிக் காலத்திலோ ரெடி கிராமத்தை மகிழ்ச்சியோடு சுற்றிப் பார்க்கலாம்.

ரெடியில் ரயில் அல்லது விமான நிலையங்கள் ஏதும் இல்லை. எனினும் ரெடி கிராமத்துக்கு சுற்றுலா வருவதற்கு இது ஒரு பெரிய தடையாக இருக்காது. ரெடிக்கு அருகிலேயே கோவா விமான நிலையமும், சாவந்த்வாடி ரயில் நிலையமும் இருப்பதால் பயணிகள் சுலபமாக ரெடியை அடிவதொடு, அவர்களுக்கு இனிமையான பிரயாண அனுபவமாகவும் அது அமையும். அதே போல் ரெடி நகரத்துக்கு குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் மகாராஷ்டிர அரசுப் பேருந்துகள் பயணிகளுக்கு வசதியானதாகவும் இருக்கும்.

ரெடி சிறப்பு

ரெடி வானிலை

சிறந்த காலநிலை ரெடி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ரெடி

  • சாலை வழியாக
    ரெடி கிராமம் கோவா எல்லையில் இருப்பதோடு, ரெடியிலிருந்து கோவா தலைநகர் பனாஜி 55 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அதேபோல் மும்பை, ரெடியிலிருந்து 566 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. இதன் காரணமாக மகாராஷ்டிராவின் அனைத்து ஊர்களிலிருந்தும் ரெடிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரெடியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சவந்த்வாடி ரயில் நிலையம் உள்ளது. இந்தியாவின் அனைத்து நகரங்களுடனும் சவந்த்வாடி ரயில் நிலையம் இணைக்கப்பட்டிருப்பதால் பயணிகள் சுலபமாக ரெடி வந்தடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ரெடியிலிருந்து தபோலின் விமான நிலையம் மிக அருகில் உள்ளது. அங்கு வந்த பின் பயணிகள் வாடகை கார்களின் மூலம் ரெடி வரலாம். வாடகை கார்களில் கிலோமீட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் வசூலிக்கப்படும். தபோலின் விமான நிலையத்துக்கு இந்தியாவின் பெருநகரங்களான மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிருந்து நிறைய விமானகள் வந்து செல்கின்றன. மற்றபடி, வெளிநாடு பயணிகள் மும்பை சத்ரபதி விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed