Search
  • Follow NativePlanet
Share

ரேவா - இயற்கை எழிலும், தொன்மையின் சிறப்பும்!

14

மத்தியபிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் அமைந்திருக்கும் நகரம் ரேவா. மாவட்டத்தின் தலைநகராக அமைந்திருக்கும் ரேவாவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள், கோட்டைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமங்கள் பல உள்ளன. இதனைத் தவிர, இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை அழகும், மனிதனால் படைக்கப்பட்ட அற்புதங்களையும், ரேவா நகரில் ஒரு சேர காணமுடியும்.

வெள்ளைப் புலிகளுக்கு புகழ் வாய்ந்த நகரம் ரேவா. இப்படி நம் மனதைக் கொள்ளை கொள்ளும் பல அழகிய சுற்றுலாத் தலங்களை கொண்டு விளங்குகிறது ரேவா நகரம்.  பிஞ் பஹார், வடக்கு கீழ் பகுதி, கைமோர் பஹார் மற்றும் ரேவா பகுதி என நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

புலிகள் சரணாலயம் தவிர்த்து, ரேவா நகரில் பாகேல் அருங்காட்சியகம், ரேவா கோட்டை, பிலி கோதி, கோவிந்த்கர் கோட்டை, கோவிந்த்கர் அரண்மனை, வெங்கட் பவன், ரானி தளாப் கிணறு, ஏபிஎஸ் பல்கலைக்கழக அரங்கம், பைரோம் பாபா சிலை, ராணிபூர் கர்ச்சூலியான், கியோந்தி நீர்வீழ்ச்சி, பூர்வா நீர்வீழ்ச்சி, சாச்சாய் நீர்வீழ்ச்சி என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல இடங்கள் உள்ளன.

ரேவா நகரின் வரலாறு

நர்மதா ஆற்றின் மற்றொரு பெயர் ரேவா என்பதாகும். கி.பி 3-ஆம் நூற்றாண்டில், இம்மாவட்டத்தில் உள்ள பகுதிகளை, மௌரிய சாம்ராஜய அரசர்கள் ஆட்சி புரிந்திருக்கின்றனர். மேலும், முதன் முதலாக வெள்ளைப் புலியைக் கண்டதும் ரேவாவில் தானாம்.

ரேவாவை அடைவது எப்படி?

விமானம், ரயில் அல்லது சாலை வழியாக எளிதில் ரேவா நகரை அடையமுடியும். கஜூரஹா விமான நிலையத்தில் இறங்கி, கார் அல்லது பேருந்து மூலம் ரேவாவை அடையலாம். ரேவாவில் ரயில் நிலையம் உள்ளது.

இது நகருக்கு மிக அருகில் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் எளிதில் இங்கு வர முடியும். மேலும் கஜூராஹாவில் இருந்து பல பேருந்துகள் ரேவாவுக்கு இயக்கப்படுகின்றன. இதன் மூலமாகவும் ரேவா நகரை அடையலாம்.

ரேவா நகரை ரசிக்க ஏற்ற காலம்

ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும் மழைக்காலத்தில் ரேவாவின் அழகை முழுமையாக ரசிக்க முடியும்.

ரேவா சிறப்பு

ரேவா வானிலை

சிறந்த காலநிலை ரேவா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ரேவா

  • சாலை வழியாக
    ரேவா நகருக்கு செல்ல பல்வேறு ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. கஜூராஹோவில் இருந்து சுமார் 169 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ரேவா நகரை சுமார் இரண்டு மணி நேரத்தில் அடையலாம். கஜூரஹாவில் இருந்து ரேவா செல்ல ரூ 120 முதல் 130 வரை பஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ரேவா நகரில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவில் ரேவா ரயில் நிலையம் அமைந்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ரேவா நகருக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. போபால், புது தில்லி மற்றும் ஜபல்பூரில் இருந்து ரயில் வழியாக ரேவா நகரை எளிதில் அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கஜூரஹோ விமான நிலையம், ரேவா நகரின் அருகே அமைந்துள்ளது. விமானம் மூலமாக வருபவர்கள் கஜூராஹோ விமான நிலையம் அடைந்து, பின்னர் கார் அல்லது பேருந்து மூலம் ரேவா நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue

Near by City