டீன்கீய் மலை உச்சி ஷில்லாங் பள்ளத்தாக்கிற்கு மேற்கே அமைந்துள்ளது. இந்த வட்டாரத்தில் உள்ள அருமையான நோக்கு கோணமாகும் இந்த இடம். ஷில்லாங் மலை உச்சியை விட இந்த இடம் வெறும் 200 அடி தான் குறைவாக உள்ளது.
இந்த மலையின் உச்சியில் இருந்து கிழக்கு காசி மலையின் பசுமையும் அழகும் மனதை பறிக்கும் விதமாக காட்சி அளிக்கும். மேலும் இங்கிருந்து பார்க்கையில் பல கிராமங்கள் சின்ன புள்ளியாக காட்சி தரும்.
இந்த உச்சியில் இருந்து ஷில்லாங்கின் பின்னணியில் உமியம் ஏரியை கூட கண்டு ரசிக்க முடியும். உலகத்தை மறந்து இயற்கையோடு ஒன்றிட விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும்.
இந்த மலையின் உச்சியில் பெரிய கிண்ணத்தின் அளவிற்கு பள்ளம் ஒன்று உள்ளது. பழங்காலத்தில் இருந்த எரிமலை அழிந்து அதனால் ஏற்பட்ட எரிமலைவாய் தான் இந்த பள்ளம் என்று புவியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இந்த உச்சியை அடைய ஷில்லாங்கிலிருந்து மவ்மரத்தில் உள்ள உமியம்-யூனியன் கிறிஸ்துவ கல்லூரி வழியாக டாக்சியில் வரலாம்.



Click it and Unblock the Notifications