டெஹ்ரிக்கு மேற்கே 17கிமீ தொலைவில் அமைந்துள்ளது சாசரம். இந்தியாவின் இரண்டாவது பெரிய கல்லறையான ஷெர்ஷா சூரி கல்லறை இங்கு உள்ளதால் ஏராளமான பயணிகள் இங்கு வருகிறார்கள்.
முகலாய மற்றும் பதான் கட்டிடக்கலையை திறம்பட எடுத்துரைக்கும் இந்தக் கல்லறை முழுக்க முழுக்க கல்லால் கட்டப்பட்டதாகும். அழகிய மிஹ்ரப் வளைவும் அதன் சுவர்களில் இருக்கும் புடைப்பெழுத்துக்களும், பூக்களும் காண்போரை வியக்கச் செய்வன.
சுகா ரோஜா என்றும் அழைக்கப்படும் இந்தக் கல்லறை உலகின் மூன்றாவது அற்புதமாகவும் இந்தியாவின் 7அற்புதங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது. தரசந்தி அம்மனின் கோவில் ஒன்றும் இங்கு உள்ளது.



Click it and Unblock the Notifications