கோட்டேஷ்வர் கோயில் என்றழைக்கப்படும் இந்த முக்கியமான ஹிந்து கோயில் ருத்ரபிரயாக் நகரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஒரு குகைக்கோயிலான இது அலக்நந்தா ஆற்றின் கரைப்பகுதியில் காணப்படுகிறது.
உள்ளூர் நம்பிக்கைகளின்படி கேதார்நாத்துக்கு செல்லும் வழியில் சிவபெருமான் இக்கோயில் தியானம் செய்ததாக சொல்லப்படுகிறது. இக்கோயிலின் சிலை சுயம்புவாக தோன்றியதாகவும் நம்பப்படுகிறது.
மஹாசிவராத்திரி திருநாளின்போது இக்கோயில் ஸ்தலத்தில் திருவிழாச்சந்தை ஒன்றும் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications