உக்கிநாத் எனும் இந்த புண்ணியத்தலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாணாசுரனின் மகளான உஷாவின் பெயரில் இந்த இடம் அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த ஸ்தலத்தில் பல்வேறு கோயில்களை யாத்ரீகர்கள் தரிசிக்கலாம். உஷா, சிவன், அனிருத்தா, பார்வதி மற்றும் மந்தடா ஆகிய தெய்வங்களின் கோயில்கள் இங்கு அமைந்திருக்கின்றன.
இங்குள்ள மற்றொரு முக்கியமான கோயிலான ஓம்காரேஷ்வரர் கோயிலில் கேதார்நாத் தெய்வமானது குளிர்காலத்தில் மட்டும் குடியேறுவதாக நம்பப்படுகிறது. அற்புதமாக வடிக்கப்பட்ட சிவன் சிலை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications