மணாலியிலிருந்து லே செல்லும் வழியில் சுமார் 475 கிமீ இடைவெளி இருப்பதால், இடையில் தங்கி ஓய்வெடுத்துச் செல்ல அருமையான இடமாக சர்ச்சு விளங்குகிறது. இங்கு முகாமிடும் சுற்றுலாப் பயணிகள் அருமையான உணவையும், அடிப்படையான முகாம் வசதிகளையும் பெற முடியும்.
எனினும், இந்த முகாமிடும் தளம் குளிர் காலங்களில் அதிகமாக பனிப்பொழிவின் காரணமாக மூடப்பட்டிருக்கும். எனவே, ஊர் சுற்றிப் பார்க்க வசதியாக இருக்கும் கோடைக்காலத்திலும், ஜுன் முதல் அக்டோபர் மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகள் சர்ச்சுவிற்கு சுற்றுலா வரலாம். மேலும், லடாக்கிலுள்ள ஸன்ஸ்கார் பகுதியில் மலையேற்றம் செய்ய வசதியான தளமாகவும் சர்ச்சு விளங்குகிறது.



Click it and Unblock the Notifications