சவாய் மாதோபூர் நகரத்தில் ஒரு முக்கியமான ஆன்மீகத்தலமாக இந்த அமரேஷ்வர் மஹாதேவ் கோயில் பிரசித்தி பெற்றுள்ளது. இது ரன்தம்போர் ஸ்தலத்தையும் சவாய் மாதோபூர் நகரத்தையும் இணைக்கும் சாலையில் அமைந்துள்ளது. அழகிய பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த கோயில் சவாய் மாதோபூர் நகரவாசிகளுக்கான பிக்னிக் ஸ்தலமாகவும் திகழ்கிறது.
இக்கோயிலில் உள்ள தெய்வத்தை வழிபட திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதன் வரலாற்று மற்றும் ஆன்மிகப்பின்னணி மட்டுமன்றி இந்த இடத்தின் இயற்கை வனப்பும் பயணிகள் மற்றும் பக்தர்களை இங்கு கவர்ந்து இழுக்கிறது. அழகான தோப்புகளும் ஒரு நீர்வீழ்ச்சியும் இந்த கோயிலுக்கு அருகிலேயே காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications