சவாய் மாதோபூர் நகரத்திலிருந்து 50 கி.மீ தூரத்தில் இந்த ராமெஷ்வரம் காட் அமைந்துள்ளது. இது சம்பல் ஆறு மற்றும் பனஸ் ஆறு ஆகிய இரண்டு ஆறுகள் ஒன்று சேரும் இடமாகும்.
இந்த பிரதேசத்தின் இயற்கை வனப்பு காரணமாக இங்கு ஏராளமான பயணிகள் திரள்கின்றனர். இந்த பிரதேசத்தில் பறவை ஆர்வலர்கள் ஏராளமான புலம்பெயர் பறவைகளை பார்த்து மகிழலாம்.
‘ராமெஷ்வரம் காட்’ ஆற்று நீர்த்தேக்கத்தில் பவிதமான நீர்வாழ் உயிரினங்களும் காணப்படுகின்றன. விதவிதமான மீன்கள், முதலைகள் ஆகியவற்றுடன் அரிதான அழிந்து வரும் உயிரினமான ஆற்றுநீர் டால்பின்களையும் இங்கு பார்க்கலாம். மேலும், இந்த ஸ்தலத்தில் புராதனமான கோயில்களையும் தரிசிக்கலாம்.



Click it and Unblock the Notifications