கலைப் பொருட்கள் உற்பத்திக்காகவும், கைத்தொழில் வளர்சிக்காகவும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டத்தின் வடிவம்தான் இந்த ஷில்ப்கிராம். இந்த சிறிய கிராமத்தில் எண்ணற்ற கைவினை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
இங்கு வரும் பயணிகள் அற்புதமான படைப்புகளை உருவாக்கும் கலைஞர்களின் கைவண்ணத்தை நேரில் காணும் அறிய வாய்ப்பை பெறுவது மட்டுமில்லாமல், அவர்கள் கண்முன்னே உருவான பொருளையே அவர்கள் வாங்கிச் செல்லலாம்.
குறிப்பாக இங்கு தயாரிக்கபடும் காஞ்சிஃபா கார்ட்ஸ், அலங்கரிக்கப்பட்ட வளையல்கள் மற்றும் நகைபெட்டிகள் போன்ற அரிய பொருட்கள் பயணிகளிடையே மிகப்பிரபலம்.



Click it and Unblock the Notifications