மோ என்ற நகரம் மணிப்பூர் மாநிலத்தின் நுழைவாயிலாக இருப்பதால், இந்த மாநிலத்துக்கு இந்த நகரம் முக்கியதவத்தை சேர்க்கிறது. இந்த நகரம் சேனாபதியிலிருந்து 45 கி.மீ. தொலைவில், மணிப்பூரின் உயிர்நாடியாக விளங்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 39 இல் அமையப்பெற்றுள்ளது.
'மோ வாயில்' என்றும் அழைக்கப்படும் இந்த நகரம் சேனாபதி மாநகராட்சியையும் அதன் மாநிலத்தையும் நாட்டின் மற்ற இடங்களுக்கு திறந்து விடுகிறது.
மணிப்பூருக்கு செல்லும் வர்த்தக பாதைகள் இந்த நகரத்தைக் கடந்து செல்வதால், இது மாநிலத்தின் சுறுசுறுப்பான வணிக மையங்களில் ஒன்றாக விளங்குகிறது. மணிப்பூர் மற்றும் அண்டைய மாநிலமான நாகாலாந்து மக்களின் கலைகளின் கலவையாக விளங்குகிறது இந்த நகரம்.
மணிப்பூரில் உள்ள நகரங்களுக்கும் இந்த நகரத்துக்கு அருகில் இருக்கும் கிராமங்களுக்கும் இந்த நகரம் களஞ்சியமாக சேவை புரிகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கிடைக்கும் பல பொருட்களை இங்கே வாங்கலாம். மேலும் மியன்மாரில் தயாரிக்கும் பொருட்களும் இங்கே விற்கப்படுவதால் பல சுற்றுலாப் பயணிகளை அவை ஈர்த்து வருகின்றன.