புருல், சேனாபதி

சேனாபதியிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள புருல் என்ற கிராமம் இந்த மாநகராட்சியின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. மணிப்பூரின் வளமையான கலாசாரத்தை இந்த கிராமத்தில் கண்கூடாக நாம் காணலாம். இந்த இடத்தை அடைய நாம் கடந்து செல்லும் பாதை நாம் என்று மறக்கா வண்ணம் இயற்கை அழகுடன் காணப்படும்.

உள்ளூர் விளையாட்டுக்களான டௌடௌ மற்றும் மல்யுத்ததிற்கு தாய்வீடாக அமைந்துள்ளது இந்த கிராமம். நாட்டிலுள்ள பல இடத்திலிருந்து மக்கள் இங்கு வந்து இந்த விளையாட்டைக் கண்டுக் களிக்கின்றனர்.

டௌடௌ  விளையாட்டு வருடப் பிறப்பு அன்று விளையாடப்படுகிறது. மே மாதத்தின் முதல் அரைத் திங்களில் நெல் அறுவடை திருவிழா கொண்டாடப்படுகிறது. போகி என்று அழைக்கப்படும் இந்த திருவிழாவின் முந்தைய நாளின் போது மல்யுத்த விளையாட்டு நடத்தப்படும்.

இது போக இந்த கிராமத்து பெண்கள் பாரம்பரியப்படி செய்யும் நெசவு, செடிகளில் இருந்து துணிகளை நெய்வதற்கு எடுக்கப்படும் நார்கள் போன்றவைகளை காட்சியில் வைப்பார்கள்.

Please Wait while comments are loading...